இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 22 வயதில் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. சுழல் பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணியின் பவுலர்கள் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின்4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியுள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில்டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரஜத் பட்டிதாருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல்லும், ஆகாஷ் தீபிற்கு பதிலாக பும்ராவும் களத்தில் இறங்கினர்.
5 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட்டை கைப்பற்றினார். இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.
இதையடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலியின் ஒரு டெஸ்ட் தொடரில் 4 ஆவது அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற புதிய சாதனையை இன்று ஏற்படுத்தியுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
2016 – 17 இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 655 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை 656 ரன்கள் எடுத்து தற்போது முறியடித்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
1970-71 இல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 774 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையைக உள்ளது. அடுத்தபடியாக கவாஸ்கர் 1978 – 79 இல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 732 ரன்கள் எடுத்திருந்தார்.
3 ஆவது இடத்தில் 2014 – 15 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது விராட் கோலி எடுத்த 692 ரன்கள் சாதனையாக உள்ளது. இதன்பின்னர், யஷஸ்வி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…