அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் நகரைச் சேர்ந்தவர் 29 வயதான கேந்த்ரா ராஸ்பெர்ரி. இவர் சில மாதங்களுக்கு முன்பு பிரபல டேட்டிங் தளமான Tinder செயலி மூலம் ஜோஷ் என்ற நபரிடம் அறிமுகமாகியுள்ளார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் தற்போது திடீரென அவரோடு கொண்டுள்ள உறவை முறித்துக் கொண்டதாக கூறியுள்ளார் ராஸ்பெர்ரி. இந்த திடீர் முடிவிற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா?
தனது மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ராஸ்பெர்ரியிடம் பண உதவி கேட்டுள்ளார் ஜோஷ். ஆனால் இந்த தொகையை கொடுக்க மறுத்த ராஸ்பெர்ரி, உடனடியாக அவரோடு கொண்டுள்ள உறவை முறித்துக் கொண்டுள்ளார். ஜோஷோடு கொண்டுள்ள உறவில் இதையெல்லம் நான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் இப்படி என்னிடம் பணம் கேட்டதை நினைத்து தனக்கு ஆச்சர்யமாக உள்ளதாகவும் ஏனென்றால் கடந்த வாரம் தான் அவர் எனக்கு மிகுந்த பொருட்செலவில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார் என்றும் தன் பக்க நியாத்தை விளக்குகிறார் ராஸ்பெர்ரி. இவர்களின் காதல் முறிவிற்கு இதுவே காரணம்.
உனக்கு இரவு விருந்திற்காக நிறைய செலவழித்துள்ளேன். ஆகையால் மின்சார கட்டணத்திற்கான பணத்தை கொடுக்க உனக்கு ஒன்றும் பிரச்சனை இருக்காது என்று ராஸ்பெர்ரிக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார் ஜோஷ். இந்த மெசேஜை பார்த்த அடுத்த நொடி, இனிமேல் நமக்குள் ஒத்துவராது என மெசேஜ் அனுப்பிவிட்டு உடனடியாக ஜோஷின் நம்பரையும் ப்ளாக் செய்துள்ளார் ராஸ்பெர்ரி.
ஜோஷ் மிகவும் அழகானவர்; அறிவானவர்; அன்பானவர்; எங்கள் இருவருக்கும் இடையிலான உறவில் நான் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தேன். ஏனென்றால் எங்கள் உறவு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஜோஷிடம் இருக்கும் பணத்திற்காக அவரோடு நான் பழகவில்லை.
இதையும் படிங்க : ஓவியர் வாழ்வில் நடந்த அதிசயம்.. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கைகள் மாற்றம்..!
எங்கள் உறவில் நானும் செலவழிக்க தயாராகவே இருந்தேன். நாங்கள் இருவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் என்றே நான் நினைத்தேன். என்னுடைய செலவுகள் எல்லாவற்றுக்கும் அவர் பணம் கொடுக்க வேண்டும் என நான் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. ஜோஷோடு பழகுவது இனிமையாகவே இருந்தது. நானும் சில விஷயங்களுக்காக இதற்கு முன்பு பணம் கொடுத்துள்ளேன் என தன் பக்க நியாத்தை வலியுறுத்துகிறார் ராஸ்பெர்ரி.
எனக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இருந்தாலும் பணம் கொடுப்பது என்னுடைய கடமை எனக் கூறப்படுவதை என்னால் ஏற்க முடியாது. அவர் என்னிடம் வேறு விதத்தில் பண உதவி கேட்டிருக்கலாம். ஆனால் அவரோ நான் இந்த உதவியை எதிர்பார்ப்பதாகவும் இதை நீ கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் கேட்டதாக கூறுகிறார் ராஸ்பெர்ரி.
இந்தப் பிரிவு எனக்குள் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஒத்துக்கொள்ளும் ராஸ்பெர்ரி, இவ்வளவு விரைவில் அவரிடம் உள்ள கெட்ட குணத்தை தெரிந்துகொண்டதால் எனக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியே என கூறுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…