மஹா பிரதோஷத்தையொட்டி (Maha Pirathosam), சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் (Sri Senpaga Vinayagar Temple) உள்ள சிவன் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாடோக்கில் கால்வாயில் சறுக்கி விழுந்த கார் – மருத்துவமனையில் ஓட்டுநர்
இது குறித்து ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (மார்ச் 07) மாலை 04.00 மணி முதல் சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மஹா பிரதோஷம் நடைபெறவுள்ளது. மாலை 04.00 மணிக்கு சங்கல்ப்பமும் தொடர்ந்து ஸ்ரீ சதா சிவனுக்கும், நந்தீஸ்வரருக்கும் ஸ்நபன குடும்ப பூசை மற்றும் 11 திரவிய அபிஷேகமும், மாலை 04.50 மணிக்கு பூர்ணாஹுதியும், கும்பம் புறப்பாடும், அபிஷேகமும், மாலை 05.10 மணிக்கு பிரதோஷ பூஜையும், மாலை 05.30 மணிக்கு மாலை பூஜையும், மாலை 05.50 மணிக்கு வசந்தமண்டப பூஜையும், மாலை 05.50 மணிக்கு காளாஞ்சி பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.
சிங்கப்பூர் “பஞ்சமுக ஆஞ்சநேயர்” – சக்திவாய்ந்த கோவில்.. வேண்டியது அப்படியே நடக்கும் அதிசயம்!
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.