மஹா சிவராத்திரியையொட்டி, வரும் மார்ச் 08- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை முதல் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடும் சட்டங்கள் கொண்ட நாடு “சிங்கப்பூர்”.. இம்மி பிசகினாலும் மரண தண்டனை தான்
இது குறித்து ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் வரும் மார்ச் 08- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 07.00 மணி முதல் மார்ச் 09- ஆம் தேதி அதிகாலை 05.30 மணி வரை மஹா சிவராத்திரி விழா விசேஷ பூஜைகளுடன் நடைபெறவுள்ளது.
மார்ச் 08- ஆம் தேதி அன்று காலை 09.15 மணிக்கு சங்கல்ப்பமும், சங்குப்பூஜையும், காலை 10.15 மணிக்கு ஸ்ரீ செண்பக விநாயகருக்கும், ஸ்ரீ சதாசிவனுக்கும் விசேஷ ஹோமமும், பூர்ணாஹுதியும், 11 திரவியங்கள் அபிஷேகமும், காலை 11.30 மணிக்கு பிரதான கும்பம் திருவீதி வலம்வருதல், விசேட 108 சங்காபிஷேகமும், மதியம் 12.00 மணிக்கு விசேஷ மதிய பூஜையும் நடைபெறவுள்ளது.
மார்ச் 08- ஆம் தேதி இரவு 07.00 மணி முதல் மார்ச் 09- ஆம் தேதி காலை 04.45 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளது.
சிதம்பரம் தேவார இசைப்பள்ளி ஆசிரியர் இசைக்கலைமாமணி பொன் முத்துக்குமரன், ஆலய ஓதுவாமூர்த்தி தேவார இசைக்கலைமணி ஆபாலமுருகன் இணைந்து வழங்கும் திருமுறை இசைக்கச்சேரி நான்கு சம வேளைகளிலும் நடைபெறும். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவன் அருளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.