
சிங்கப்பூர் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எங்கு வேண்டுமானாலும், எந்த வேலையாக இருந்தாலும் செய்ய தயாராக இருக்கும் ஊழியர்கள் மத்தியில் மாதம் 4 லட்சம் சம்பளம் கொடுக்க தயாராக நிறுவனம் இருந்தும் அதற்காக விண்ணப்பிக்க ஒரு ஆள் கூட இல்லை என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் கடலில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு ஆள் வேண்டும் என்ற அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
வேலை என்ன என்று பார்த்தால், கிணறுகள் தோண்டவும், எண்ணெய், எரிவாயு போன்றவற்றை பிரித்து எடுக்கவும் மேலும் அதனை சுத்திகரிக்கவும் ஆள் தேவை இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
கடல் பகுதியில் இருந்து அவற்றை நிலப்பகுதியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும், இதாங்க வேலையாம்.
நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை, இரண்டு ஆண்டுகளில் இரு ஆறு மாத ஷிப்ட் வேலை செய்தால் 1 கோடி சம்பளம் என்றும் அந்நிறுவனம் சம்பளம் அளித்துள்ளது. ஒரு வருட மட்டும்தான் கடலில் வேலை, அடுத்த வருடம் நிலப்பகுதியில் வேலை.
மாதம் 1 வாரம் வரை விடுப்பு என வருடத்திற்கு 6 மாதம் வரை லீவு எடுத்துக்கலாம் எனவும் சொல்றாங்க.. பேசாம நாமளும் அந்த வேலைக்கே போய்டலாம் போல.