ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக வலைத்தள சேவைகள் முடங்கின!
தீப்பிடித்து எரிந்த மறுசுழற்சி டிரக் – காரணம் என்ன?
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள சேவைகள் முடங்கின. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள சேவைகள் முடங்கியுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர்.
Log in ஆகியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தள பக்கங்களும் Log Out ஆனதால் பயனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, மார்க் ஜூக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் விரைவில் சரி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.