• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பரிசுத்தொகை ரூ.95 லட்சத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய ஹர்திக் பாண்டியா… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பரிசுத்தொகை ரூ.95 லட்சத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய ஹர்திக் பாண்டியா… | Makkal Osai
Share on FacebookShare on Twitter


சென்னை, பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, உலகின் முன்னணி யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் நடத்திய பிரம்மாண்ட சவாலில் வெற்றி பெற்று சுமார் ரூ. 95 லட்சம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். தான் வென்ற இந்த முழுத் தொகையையும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் விலங்கு நல அமைப்புகளுக்கு அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கர்நாடகாவில் நடந்த பிரம்மாண்ட விளையாட்டு போட்டி
பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தார். இதையடுத்து அவர் தனது யூடியூப் சேனலுக்காக “Beat Professional Athlete, Win $100,000” என்ற தலைப்பில் ஒரு புதிய சவாலை ஏற்பாடு செய்திருந்தார். இதில் உலகளவில் பிரபலமான பல்வேறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த சவாலின் ஒரு பகுதி, இந்தியாவின் கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாப்பூரில் உள்ள சாய் கிருஷ்ணன் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட்டது. 

பேஸ்பால் சவாலில் அசாத்திய வெற்றி
இதில் பேஸ்பால் வீசுதல் சவாலில் பங்கேற்ற பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, துல்லியமாக இலக்கைத் தாக்கி அசாத்திய வெற்றி பெற்று $100,000 (சுமார் ரூ. 95 லட்சம்) பரிசுத்தொகையை வென்றுள்ளார். இந்த சவால் விளையாட்டு அடங்கிய முழு வீடியோ எடிட் செய்யப்பட்டு, கடந்த மாதம் 31-ம் தேதி அன்று மிஸ்டர் பீஸ்டின் யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்திய யூடியூபர் கேரிமினாட்டியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

விலங்கு நலன் -குழந்தைகளுக்கு நன்கொடை
வெற்றிக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்த பரிசுத்தொகை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதனை நான் என் சொந்தத் தேவைக்கு பயன்படுத்தப் போவதில்லை. ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி, உணவு வழங்கவும், தெருநாய்களின் பராமரிப்பு மற்றும் விலங்கு நலனுக்காகவும் இந்த ரூ. 95 லட்சத்தையும் முழுமையாக நன்கொடையாக வழங்குகிறேன்” என்று அறிவித்தார்.

ரசிகர்கள் -நெட்டிசன்கள் பாராட்டு
மைதானத்தில் அதிரடி காட்டுவது மட்டுமல்லாமல், நிஜ வாழ்விலும் தொண்டுள்ளத்தோடு சமூக நலனில் தனக்குள்ள அக்கறையை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.



Read More

Previous Post

தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..! | Diwali Delivery Crisis: Quick-Commerce & E-Commerce Face 30% Gig Worker Shortage in Major Cities

Next Post

குறையப்போகும் அரிசி விலை நீக்கப்பட்டது இறக்குமதி வரி

Next Post
குறையப்போகும் அரிசி விலை நீக்கப்பட்டது இறக்குமதி வரி

குறையப்போகும் அரிசி விலை நீக்கப்பட்டது இறக்குமதி வரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin