ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் செயற்பாட்டுப் பிரிவுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஆரம்பமாகும் இந்தக் கூட்டத் தொடர், வாரத்தில் ஐந்து நாள்களும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். (a)

