Last Updated:
வங்கதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்ட கார்மென்ட்ஸ் தொழிலாளர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
வங்கதேசத்தில் கூலியை உயர்த்தக் கோரி கார்மென்ட் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
வங்கதேசத்தில் கார்மென்ட்ஸ் தொழிலாளர்களின் அடிப்படை மாத ஊதியம் 12,500 டாக்கா ஆக உள்ள நிலையில் அதை 30,000-ஆக உயர்த்தி வழங்க கோரி தலைநகர் டாகா, காசிபூர் உள்ளிட்ட இடங்களில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Dhaka seems out of control!
#BangladeshCrisis https://t.co/z7KAMYqXmR— Asifur Rahman Chowdhury (@Asifurrahman71) November 1, 2026
வங்கதேசத்தில் உணவு, வீட்டு வாடகை, போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் தங்களின் தற்போதைய வருமானத்தை வைத்து வாழ முடியவில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து தற்போதைய அடிப்படை மாத ஊதியம் 12,500 டாக்கா (சுமார் 9,600 ரூபாய்) ஆக உள்ளது. இதனை 30,000 டாக்காவாக (சுமார் 23,000 ரூபாய்) உயர்த்தி வழங்கக் கோரி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்த நிலையில் காவல் துறை கண்காணிப்பு கோபுரங்களை அடித்து நொறுக்கிய தொழிலாளர்கள், காவல் வாகனங்களுக்கு தீ வைத்தனர். கலவரத்தில் ஈடுபட்ட கார்மென்ட்ஸ் தொழிலாளர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். தொழிலாளர் போராட்டத்தால் தலைநகர் டாக்கா கலவர பூமி போல் காட்சி அளித்தது.

