• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஊடகச் செய்திகளை அனுமதியின்றி மறுபதிவு செய்யக்கூடாது – சமூக ஊடக நிர்வாகிகளுக்கு ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in மலேசியா
Reading Time: 6 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


(ரெ. மாலினி)

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரக் காலத்தில், பிரதான ஊடக நிறுவனங்களின் செய்திகளையும் செய்தியாளர்களின் செய்தி உள்ளடக்கங்களையும் உரிய அனுமதியின்றிப் பயன்படுத்துவதையும், மூல ஊடகத்தின் பெயரைக் குறிப்பிடாமல் மறுபதிவு செய்வதையும் தவிர்க்க வேண்டும் எனத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் வலியுறுத்தியுள்ளார்.

பிரதான ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளையும் செய்தியாளர்களின் களப்பணியின் மூலம் உருவாக்கப்படும் செய்தி உள்ளடக்கங்களையும் பல தரப்பினர் உரிய அங்கீகாரம் வழங்காமல் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பயன்படுத்துவதாகத் தனது அமைச்சுக்குப் புகார்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு செய்தியையும் உருவாக்குவதற்குப் பின்னால் செய்தியாளர்களின் கடின உழைப்பும், களப்பணியும், அர்ப்பணிப்பும் உள்ளன. எனவே, அவர்களின் உழைப்பை மற்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான பிரதான ஊடக மையத்தை ஆயர் கெரோவில் பார்வையிட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.   இதற்கிடையில், தேர்தல் செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு உதவும் வகையில் மலாக்கா முழுவதும் உள்ள 39 தேசிய தகவல் பரப்பும் மையங்கள் (NADI) திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்கள் தாங்கள் செய்தி சேகரிக்கும் பகுதிகளில் இணைய வேகத்தைப் பரிசோதிக்க MCMC Nexus செயலியைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் இணைய இணைப்பு பலவீனமாக உள்ள பகுதிகளையும் தொடர்பு வசதி இல்லாத இடங்களையும் அடையாளம் காண முடியும் என்றார்.

அதேவேளையில், தேர்தல் பிரசாரக் காலத்தில் வேட்பாளர்கள் செய்தியாளர்களின் பணிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலைப் பாதிக்கும் சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஃபஹ்மி வலியுறுத்தினார்.

செய்தியாளர்கள் மலாக்கா மாநிலத் தேர்தல் செய்திகளைத் தடையின்றியும் திறம்படவும் சேகரிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதே ஊடக மையம் மற்றும் NADI மையங்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

டிரம்ப் – நெதன்யாகு ரகசிய போன்கால்! ‘பேஜர் அட்டாக்’ நடத்த திட்டம்.. 4 ஈரான் தலைவர்களுக்கு டார்கெட்! | Secret Phone Call: Trump & Netanyahu Plan Massive Attack on Iran — Pager Strike Target List Revealed

Next Post

கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் – ஐபிசி தமிழ்

Next Post
கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் – ஐபிசி தமிழ்

கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin