வட கொரிய ஹேக்கர்களிடம் சிக்கி சின்னாபின்னமான Binance.. 20 நிமிடத்தில் 6.3 பில்லியன் டாலர் திருடியது எப்படி..?
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான பினான்ஸ் தளத்தை வட கொரியை ஹேக்கரகள் ஹேக் செய்து வெறும் 20 நிமிடத்தில் 6.3 பில்லியன் டாலரைத் திருடியுள்ளனர். வட கொரியா திடீர் ஏவுகணை சோதனைக்கு மட்டும் அல்லாமல் அவ்வப்போது பெரும் சைபர் அட்டாக் செய்து உலக நாடுகளைப் பீதி அடையச் செய்யும்.
சமீபத்தில் எஸ்பிஐ வங்கி தரவுகளைத் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு, திறன் வாய்ந்த சைபர் செக்யூரிட்டி இன்ஜினியர்களை வைத்துக்கொண்டு எப்படி பினான்ஸ் வட கொரிய ஹேக்கர்களிடம் சிக்கியது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஹேக்கிங் உலகில் வட கொரிய ஹேக்கர்கள் பெரும் சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றனர், தற்போது பினான்ஸ் தளத்தில் நடத்த சைபர்அட்டாக்-ஐ பார்க்கும் போது ஒரு இன்டஸ்ட்ரியல் அளவிலான ஆப்ரேஷனாக பார்க்கப்படுகிறது.
காரணம் பினான்ஸ் போன்ற பாதுகாப்பான நிதியியல் தளத்தில் வெறும் 20 நிமிடத்தில் ஹேக் செய்து 6.3 பில்லியன் டாலர் திருடியதைப் பார்க்கும் போது பெரிய அளவிலான ஆட்டோமேஷன் நடைமுறையில், அதிவிரைவாக நடத்தப்பட்டு உள்ளது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் இந்த சைபர்அட்டாக்கில் ஏஐ பயன்படுத்தப்பட்டதாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
TRM Labs வெளியிட்டுள்ள தகவல் படி இந்த தாக்குதல் துவங்குவதற்கு முன்பு சுமார் 36 மணிநேரம் இதற்கான பணியில் வடகொரிய ஹேக்கர் குழு ஈடுபட்டு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. Binance தளத்தில் இருந்து சுமாக் 6.36 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி மற்றும் விர்ச்சுவல் சொத்துக்களைத் திருடியுள்ளனர்.
இந்த திருடப்பட எதிரியாம், பிட்காயின், சோலானோ என பல கிரிப்டோகரன்சியை கொண்டது. திருடப்பட்ட 6.36 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோவை உடனுடன் பல சலவை செய்து பணமாக பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
போட்டி நிறுவனங்கள், பாதுகாப்பு அமைப்புகள், எப்டிஐ உட்படப் பலரின் முயற்சியில் 2.67 – 3 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்களை முடக்கப்பட்டாலும், எஞ்சிய குழு திருடியுள்ளது.
இந்த இழப்பை பினான்ஸ் தளம் தனது சொந்த நிதி ஆதாரங்களை வைத்து ஈடு செய்வதாக அறிவித்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் யாரும் பணத்தை இழக்க மாட்டார்கள்.
இந்த மாபெரும் சைபர் அட்டாக்கிற்கு வட கொரியாவின் TraderTraitor அமைப்பு தான் காரணம் என FBI தெரிவித்துள்ளது. மிகவும் குறுகிய காலகட்டத்தில் இதுபோன்ற பெரிய தொகையைத் திருடி அதை உடனடியாக பண சலவை செய்து பணமாக மாற்றியுள்ளது என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் உலகின் அனைத்து நிதியியல் தளமும் இனி உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்பது அவசியத்தைத் தாண்டி கட்டாயமாகியுள்ளது.
