Last Updated:
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் எல்லைகளின்றி பதிலடி கொடுக்க மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், புவியியல் எல்லைகள் இன்றி கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என புரட்சிகர காவல்படைக்கு உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கு பின்னர், ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதனை தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் படி ஈரான் ராணுவத்திற்கு உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளங்களைக் கண்டறிந்து தாக்குதல் இலக்கு பட்டியலை உடனடியாகப் புதுப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அந்தப் போரை எப்போது, என்ன நிபந்தனைகளுடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை ஈரானிய ஆயுதப் படைகளும், மக்களுமே தீர்மானிப்பார்கள்” என்றும் மொஜ்தபா கமேனி கூறியுள்ளார்.
ஈரான் எல்லைப் பகுதிகள், பார்சியா வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகிய பகுதிகளில் ராணுவத் தயார் நிலையை அதிகரிக்கவும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் உற்பத்தியைப் பெருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது..


