Last Updated:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, தொடரை 2-1 என கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, தொடரை 2-1 என கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்ற நிலையில், தொடரின் வெற்றி தீர்மானிக்கும் 3வது போட்டி, கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 329 ரன்களும், ஆஸ்திரேலியா 429 ரன்களும் எடுத்தன. ரிக்டல்ன், முல்டர் ஆகியோர் சதத்தால் தென் ஆப்ரிக்கா அணி 2வது இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது.
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என 5வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. அந்த அணி 111 ரன்களில் ஆல் அவுட் ஆகி, 176 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்ரிக்காவின் சைமைன் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


