• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அச்சுறுத்தலுக்கு மத்தியில் துணிச்சலான நடவடிக்கை.. 150 ஆப்கானியர்களை பாகிஸ்தான் வழியாக வெளியேற்ற அமெரிக்கா திட்டம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
அச்சுறுத்தலுக்கு மத்தியில் துணிச்சலான நடவடிக்கை.. 150 ஆப்கானியர்களை பாகிஸ்தான் வழியாக வெளியேற்ற அமெரிக்கா திட்டம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 31, 2026 3:59 PM IST

நீதிமன்றங்களின் மூலம் பாதுகாப்பு கோரிய போதிலும், அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இந்த வெளியேற்ற நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

News18
News18

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களைப் பாகிஸ்தான் வழியாக மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்பத் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தாலிபான் ஆட்சியில் உயிருக்கு ஆபத்து மற்றும் சித்திரவதைகளைச் சந்திக்க நேரிடும் என்ற கடும் அச்சத்திற்கு மத்தியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தாலிபான் அரசை அமெரிக்கா முறைப்படி அங்கீகரிக்கவில்லை என்பதால், அவர்களுடன் நேரடித் தூதரக உறவுகள் இல்லை. இதனால், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச் அமலாக்கப் பிரிவு (ICE) இவர்களை முதலில் பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று, பின்னர் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

இந்த வெளியேற்றப்படுவோர் பட்டியலில் அமெரிக்க ராணுவத்திற்கு உதவிகளைச் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் தாலிபான்களால் தீவிர தண்டனைக்கு உள்ளாக்கப்படக்கூடிய மாற்று பாலினத்தவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இதில் முகமது (47) என்ற ஆப்கானியர், 1981-இல் சோவியத் படையெடுப்பின் போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு அகதியாக வந்தவர்.

2020-இல் அமெரிக்க ஆணை மணந்த இவருக்கு, தாலிபான் ஆட்சியில் ஓரினச்சேர்க்கைக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால் ஆப்கானிஸ்தான் திரும்பினால் உயிர் பயம் நிலவுகிறது. அதேபோல், மற்றொரு ஆப்கானியர் தனது மனைவி முந்தைய ஆப்கான் ராணுவத்திலும் காவல்துறையிலும் பணியாற்றியதால் தாலிபான்களால் சித்திரவதை செய்யப்பட்டு அமெரிக்காவிற்குத் தப்பி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு தடுப்பு முகாம்களில் இருந்த ஆப்கானியர்கள் தற்போது லூசியானாவில்  உள்ள சிறை முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நவம்பர் 2-ஆம் தேதி முதற்கட்ட சிறப்பு விமானம் லூசியானாவின் அலெக்ஸாண்டிரியா நகரில் இருந்து புறப்படக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானியர்களை இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் அமெரிக்கா வெளியேற்றுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. நீதிமன்றங்களின் மூலம் பாதுகாப்பு கோரிய போதிலும், அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இந்த வெளியேற்ற நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

Read More

Previous Post

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் செலரி கீரை..! நீலகிரியில் சிறப்பாக நடக்கும் சாகுபடி..! | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

மலாக்காவில் பாரிசான் – பெரிக்காத்தான்  ‘நீல அலை’ குறித்து ஹம்ஸா நம்பிக்கை | Makkal Osai

Next Post
மலாக்காவில் பாரிசான் – பெரிக்காத்தான்  ‘நீல அலை’ குறித்து ஹம்ஸா நம்பிக்கை | Makkal Osai

மலாக்காவில் பாரிசான் - பெரிக்காத்தான்  ‘நீல அலை’ குறித்து ஹம்ஸா நம்பிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin