• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டானுக்கெல்லாம் டான்..!! 6 மாதங்களில் ரூ.50,000 கோடி லாபம் பார்த்த முகேஷ் அம்பானி..!! | Mukesh Ambani’s RIL Posts Record ₹29,550 Crore Profit; H1 Profit Crosses ₹50,000 Crore

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டானுக்கெல்லாம் டான்..!! 6 மாதங்களில் ரூ.50,000 கோடி லாபம் பார்த்த முகேஷ் அம்பானி..!! | Mukesh Ambani’s RIL Posts Record ₹29,550 Crore Profit; H1 Profit Crosses ₹50,000 Crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டானுக்கெல்லாம் டான்..!! 6 மாதங்களில் ரூ.50,000 கோடி லாபம் பார்த்த முகேஷ் அம்பானி..!!

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் , நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வரலாறு காணாத வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதனால் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் உயர்ந்து 3.62 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சென்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதேபோல், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 33.8% முதல் 41% வரை உயர்ந்து 29,550 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

டானுக்கெல்லாம் டான்..!! 6 மாதங்களில் ரூ.50,000 கோடி லாபம் பார்த்த முகேஷ் அம்பானி..!!

நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தை குறிக்கும் ஒருங்கிணைந்த EBITDA (Earnings before Interest, Tax, Depreciation, and Amortization) மதிப்பும் வரலாறு காணாத வகையில் 62,409 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 23.9% அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த லாபம் 52,746 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஒரு நிதியாண்டின் முதல் பாதியிலேயே இவ்வளவு பெரிய லாப இலக்கை எட்டுவது ரிலையன்ஸின் வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.

ரிலையன்ஸின் டிஜிட்டல் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இந்த காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மொத்த வருவாய் 11% அதிகரித்து 47,485 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், ஜியோவின் நிகர லாபம் 8,387 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

ஜியோவின் ஒரு பயனரிடம் இருந்து கிடைக்கும் சராசரி மாத வருவாய் (ARPU – Average Revenue Per User) உயர்ந்து 218.8 ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜியோவின் 5G சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 30 கோடியை கடந்துள்ளது.

ரிலையன்ஸின் ஆயில்-டு-கெமிக்கல்ஸ் (O2C) பிரிவு இந்த காலாண்டில் மிகவும் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வலுவான உள்நாட்டு எரிபொருள் தேவை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளின் சிறந்த செயல்பாடு ஆகியவற்றால் இப்பிரிவின் வருவாய் மற்றும் லாபம் பெருமளவு உயர்ந்துள்ளது. இப்பிரிவின் லாபம் 67.9% வளர்ச்சி பதிவாகியுள்ளது.

சில்லறை வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 6.4% அதிகரித்து 91,716 கோடியை எட்டியுள்ளது. டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் ஜியோமார்ட் பிரிவின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.ம் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி பிரிவின் வருவாய் 6,020 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. சர்வதேச எரிவாயு விலை மாற்றங்களுக்கு மத்தியில் இப்பிரிவு நிலையான லாபத்தை வழங்கியுள்ளது.

செயல்பாட்டு ரீதியான பலம் மற்றும் லாபம் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் சுமை கணிசமாக குறைந்துள்ளது. செப்டம்பர் 30 நிலவரப்படி நிறுவனத்தின் நிகர கடன் 1,17,140 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எரிபொருள் வணிகம், ஜியோவின் சீரான வளர்ச்சி மற்றும் சில்லறை வர்த்தகத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவை இணைந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இந்த காலாண்டை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காலாண்டாக மாற்றியுள்ளன.

Share This Article

English summary

Mukesh Ambani’s RIL Posts Record ₹29,550 Crore Profit; H1 Profit Crosses ₹50,000 Crore

டானுக்கெல்லாம் டான்..!! 6 மாதங்களில் ரூ.50,000 கோடி லாபம் பார்த்த முகேஷ் அம்பானி..!!/ Reliance Industries Limited, led by Mukesh Ambani, reported its highest-ever quarterly performance in Q2 FY27, with consolidated gross revenue rising 27.8% year-on-year to ₹3,62,268 crore and profit after tax increasing 33.8% to ₹29,550 crore.

Story first published: Saturday, October 31, 2026, 9:02 [IST]

Other articles published on Oct 31, 2026

Read More

Previous Post

Reliance Digital | ரிலையன்ஸ் ரீடெய்ஸ்-ன் 2ம் காலாண்டு நிகர லாபம் 24.5% சரிவு… வருவாய் 6.4% அதிகரிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இஸ்ரேல்: “தேர்தல் முறைகேடு நடந்துள்ளது” – பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நெதன்யாகு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)

Next Post
இஸ்ரேல்: “தேர்தல் முறைகேடு நடந்துள்ளது” – பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நெதன்யாகு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)

இஸ்ரேல்: “தேர்தல் முறைகேடு நடந்துள்ளது” - பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நெதன்யாகு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin