• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல்: “தேர்தல் முறைகேடு நடந்துள்ளது” – பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நெதன்யாகு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இஸ்ரேல்: “தேர்தல் முறைகேடு நடந்துள்ளது” – பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நெதன்யாகு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 31, 2026 6:48 AM IST

அரபுக் கட்சிகளின் கூட்டணி, கத்தார் மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து வந்த நிதியை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடு செய்தாக நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். 

நெதன்யாகு (கோப்புப்படம்)
நெதன்யாகு (கோப்புப்படம்)

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரபு கட்சிகளும் வெளிநாட்டு சக்திகளும் சேர்ந்து தேர்தலைத் திருடிவிட்டதாக பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில், நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது. எனினும் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்காட் (Gadi Eisenkot)  தலைமையிலான கூட்டணி நெதன்யாகுவிற்கு கடுமையான போட்டியை கொடுத்துள்ளது. குறிப்பாக யாரும் எதிர்பாராத வகையில் அரபு வம்சாவளி அரசியல் கட்சிகள் Kingmakers- ஆக உருவாகியுள்ளனர். இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 21 சதவிகிதம் பேர் பாலஸ்தீன வழிவந்த அரபு இஸ்ரேலிய குடிமக்கள். இஸ்ரேலில் செயல்படும் ராஅம் (Ra’am), ஹடாஷ் (Hadash), தஆல் (Ta’al), பாலாத் (Balad) ஆகியவை அரபு இஸ்ரேலிய குடிமக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிகள். இஸ்ரேல் தன்னை “யூத நாடு” என வரையறுப்பதை நிறுத்திவிட்டு அனைத்து குடிமக்களுக்குமான அரசாக மாற வேண்டும் என்று இந்த கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இதையும் படிங்க: உயிர் பயத்தால் மெட்ரோ ரயிலில் தஞ்சம் புகுந்த GAME OF THRONES நடிகர்… என்ன ஆனது?

இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்குள் நுழைய  குறைந்தபட்சம் 3.25 சதவிகித வாக்குகள் பெற வேண்டும். இந்த விதிமுறை 2014-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. அரபு கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் வாக்குகள் சிதறும் என்பதால், இந்த நான்கு கட்சிகளும் The Joint List என்ற பெயரில் ஒன்றாக போட்டியிட்டன. 2020 தேர்தலில் இக்கூட்டணி 15 இடங்களைக் கைப்பற்றி இஸ்ரேலின் 3-வது மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது இந்தக் கூட்டணி. பின்னர் உள்நாட்டு அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக ராஅம்  (Ra’am), கட்சி அப்போதைய ஆளும் கூட்டணியில் இணைந்தது. தற்போதைய தேர்தலில், பாலாத் (Balad ), ஹடாஷ் (Hadash), –தஆல் (Ta’al) கட்சிகள் ஒரு அணியாகவும், ராஅம் (Ra’am) கட்சி தனியாகவும் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அரபு கட்சிகளின் கூட்டணி, 14 முதல் 16 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றமான Knesset-ல் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. நெதன்யாகு பிரதமராக தொடர வேண்டும் என்றாலும், எதிர்க்கட்சிகள் அரசு அமைக்க வேண்டும் என்றாலும், “தீண்டத்தகாதவையாக” ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த அரபு கட்சிகளின் ஆதரவு அவசியம். ஆனால், அரபு கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் தங்கள் யூத வாக்காளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

Israel Election Results: क्या इजराइल में पहली बार बनेगी अरब पार्टियों के समर्थन वाली सरकार? नेतन्याहू को तगड़ा झटका, अब तक इतनी सीटें

இஸ்ரேல் தேர்தல் களம்

மற்றொருபக்கம் பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை எட்ட முடியாமல்  நெதன்யாகுவின் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து அரபுக் கட்சிகளின் கூட்டணியான Joint List, கத்தார் மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து வந்த நிதியை  பயன்படுத்தி தேர்தலில் முறைகேடு செய்தாக நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

நெதன்யாகுவின் இந்த குற்றச்சாட்டை  இஸ்ரேல் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் நிராகரித்துள்ளன. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய தேர்தல் கமிட்டியின் தலைவர் நீதிபதி நோவாம் சோல்பெர்க் (Noam Sohlberg), வெளிநாட்டு நிதி மற்றும்  அதன் தாக்கங்கள் இருந்தனவா என்பது குறித்து விசாரிக்க ஷின் பெட் (Shin Bet) அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளார்.

Read More

Previous Post

டானுக்கெல்லாம் டான்..!! 6 மாதங்களில் ரூ.50,000 கோடி லாபம் பார்த்த முகேஷ் அம்பானி..!! | Mukesh Ambani’s RIL Posts Record ₹29,550 Crore Profit; H1 Profit Crosses ₹50,000 Crore

Next Post

மற்ற செய்திகள்.. – Malaysiakini

Next Post
மற்ற செய்திகள்.. – Malaysiakini

மற்ற செய்திகள்.. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin