• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நச்சுக்காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரை பறித்த வெளிநாட்டு பெண்: விதிக்கப்பட்ட தண்டனை

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நச்சுக்காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரை பறித்த வெளிநாட்டு பெண்: விதிக்கப்பட்ட தண்டனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அவுஸ்திரேலியாவில் நச்சுக் காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரைப் பறித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற எரின் பாட்டர்சன், தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டிய வகையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


52 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான எரின் பாட்டர்சன், 2023 ஜூலை மாதம் தனது குடும்பத்தினருக்கு வழங்கிய மதிய உணவில், உயிருக்கு ஆபத்தான ‘டெத் கெப்’ (Death Cap) நச்சுக் காளான்கள் கலந்த பீஃப் வெலிங்டன் உணவைப் பரிமாறியுள்ளார்.


இந்த உணவை உட்கொண்ட அவரது பிரிந்து வாழும் கணவரின் பெற்றோர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

மூன்று ஆயுள் தண்டனை

மேலும், உணவை உட்கொண்ட மதபோதகர் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, பல வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உயிர் பிழைத்தார்.

நச்சுக்காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரை பறித்த வெளிநாட்டு பெண்: விதிக்கப்பட்ட தண்டனை | Mushroom Murderer Given 3 Killing Lunch Guests


இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, மூவரின் உயிரைப் பறித்த குற்றச்சாட்டில் கடந்த ஜூலை மாதம் எரின் பாட்டர்சன் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.


இதையடுத்து, மூன்று கொலைக் குற்றங்களுக்காக மூன்று ஆயுள் தண்டனைகளும், மற்றொருவரைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டன.


முன்னதாக வழங்கப்பட்ட தண்டனையின்படி, 33 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் பிணையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது.


எனினும், இந்தத் தண்டனை குற்றத்தின் தீவிரத்துக்குப் போதுமானதல்ல எனக் குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.


இந்தச் சம்பவம் திட்டமிட்டு, இரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட தீவிரமான குற்றங்கள் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், குற்றத்தைச் செய்வதற்காக அவர் சிக்கலான ஏமாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


தண்டனையை ரத்துச் செய்து மீண்டும் வழக்கு விசாரணை நடத்துமாறு எரின் பாட்டர்சனின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த நச்சுக் காளான் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, எரின் பாட்டர்சன் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ரெம்பாவ் பகுதியில் வெள்ள நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் முதியவர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post

முடக்குவாதத்தால் பாதித்த மகனுக்காக லீவு எடுத்த அரசு பஸ் டிரைவர்! பணிமனை மேலாளர் மிரட்டுவதாக புகார் | Tirupattur bus driver complaint against depot manager

Next Post
முடக்குவாதத்தால் பாதித்த மகனுக்காக லீவு எடுத்த அரசு பஸ் டிரைவர்! பணிமனை மேலாளர் மிரட்டுவதாக புகார் | Tirupattur bus driver complaint against depot manager

முடக்குவாதத்தால் பாதித்த மகனுக்காக லீவு எடுத்த அரசு பஸ் டிரைவர்! பணிமனை மேலாளர் மிரட்டுவதாக புகார் | Tirupattur bus driver complaint against depot manager

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin