Last Updated:
பூமியை கண்காணிக்க உதவும் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துகிறது.
பூமியை கண்காணிக்க உதவும் ‘என்.வி.எஸ்-03’ செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு விண்ணில் செலுத்துகிறது.
அமெரிக்காவின் GPS போல, நேவிக் (NavIC) என்ற திசைகாட்டி அமைப்பை இந்தியா உருவாக்கி வரும் நிலையில், அதற்காக NVS-03 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. L1 எனப்படும் முதன்மை ரேடியோ அலைவரிசையையும் இந்த செயற்கைக்கோள் கையாளும் திறன் கொண்டுள்ளது.
இது உலகளாவிய ஜிபிஎஸ் அமைப்புகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளவும், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் செல்போன்கள் போன்ற சாதனங்களிலும் நேவிக் சேவையைப் பயன்படுத்தவும் பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வேயில் நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளுக்குப் பெரிதும் கைகொடுக்கும் இந்த நேவிக் அமைப்பின் வருகை, நாட்டின் விண்வெளித் துறையில் மற்றொரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 11:51 மணிக்கு திசைகாட்டி செயற்கைக்கோளுடன் GSLV-F18 ராக்கெட் விண்ணில் பாயவுள்ள நிலையில், அதன் மாதிரிகளுடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்தினார்.


