• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

6.3 பில்லியன் டொலர் கிரிப்டோ கொள்ளை: வடகொரியா மீது சந்தேகம்

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
6.3 பில்லியன் டொலர் கிரிப்டோ கொள்ளை: வடகொரியா மீது சந்தேகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




உலகளவில் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பைனான்ஸ் (Binance) நிறுவனத்தில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சி கொள்ளைக்குப் பின்னணியில் வடகொரியா இருக்கலாம் என ‘ரொய்ட்டர்ஸ்’   செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.


பிளொக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான ‘டி.ஆர்.எம் லேப்ஸ்’ (TRM Labs) தெரிவித்துள்ள தகவலின்படி, கொள்ளையடிக்கப்பட்ட பெரும்பாலான நிதியை தாக்குதல்தாரிகள் சுமார் 20 நிமிடங்களுக்குள் வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இது இதற்கு முன்னர் வடகொரிய ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்களை ஒத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதனிடையே, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் பாதியை பைனான்ஸ் நிறுவனம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதுடன், தனது பங்காளிகளுடன் இணைந்து ஏனைய தொகையை முடக்கியுள்ளது. மேலும், பயனர்கள் எவருக்கும் பண இழப்பு ஏற்படாத வகையில் அனைத்து இழப்புகளையும் பைனான்ஸ் நிறுவனமே ஈடுசெய்யும் என அந்நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஈ ஹே (Yi He) தெரிவித்துள்ளார்.


இருப்பினும், இச்சம்பவம் மையப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளங்களின் அபாயங்கள் குறித்தான அச்சத்தை மீண்டும் தூண்டியுள்ளதுடன், கிரிப்டோ சந்தையில் விற்பனை வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, பிட்கொயினின் (Bitcoin) மதிப்பு 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு 76,368 அமெரிக்க டொலராகக் குறைந்ததுடன், ஈதர் (Ether) நாணயத்தின் மதிப்பும் இதே சதவீதத்தில் சரிந்து 2,178 டொலராக வீழ்ச்சியடைந்தது.


பைனான்ஸ் நிறுவனப் பொறியாளர் ஒருவரின் கணினியில் (Laptop) ஏற்படுத்தப்பட்ட ஊடுருவலே தாக்குதல்தாரிகள் நிறுவனத்தின் உட்புற அமைப்புகளை அணுகி, சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு வழியமைத்துள்ளதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். 



Read More

Previous Post

ஆறுதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து

Next Post

பூமியை கண்காணிக்க உதவும் ‘என்.வி.எஸ்-03’ செயற்கைக்கோள்.. ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு விண்ணில் ஏவுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பூமியை கண்காணிக்க உதவும் ‘என்.வி.எஸ்-03’ செயற்கைக்கோள்.. ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு விண்ணில் ஏவுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

பூமியை கண்காணிக்க உதவும் 'என்.வி.எஸ்-03' செயற்கைக்கோள்.. ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு விண்ணில் ஏவுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin