பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு டாம் பாண்டன், பென் டக்கெட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 163 ரன்கள் சேர்த்தது. டாம் பாண்டன் 75 பந்துகளில் 74 ரன்கள் (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்)(24 பவுண்டரிகள்) எடுத்தார்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹாரி ப்ரூக் 44 ரன்கள், வில் ஜாக்ஸ் 30 ரன்கள், ஜோர்டான் காக்ஸ் 43 ரன்கள், சாம் கரண் 21 ரன்கள் எடுத்தனர்.இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷங்கா, எஷான் மலிங்கா, தாசுன் ஷானகா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கமிந்து மென்டிஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னான்டோ 48 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். இலங்கை அணியில் அதிரடியாக விளையாடிய பவன் ரத்நாயகே சதம் விளாசி அசத்தினார். அவர் 77 பந்துகளில் 118 ரன்கள் (15 பவுண்டரிகள்,1 சிக்சர்) எடுத்தார். கேப்டன் குசல் மெண்டிஸ் அரைசதம் விளாசினார். அவர் 71 பந்துகளில் 89 ரன்கள் (8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்தார். அவிஷ்கா ஃபெர்னாண்டோ 48 ரன்கள், சஹான் 30 ரன்கள், ஜனித் லியாநாகே 27 ரன்கள் எடுத்தனர். இவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 45.1 ஓவர்களில் 331 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் லியம் டாசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சோனி பேக்கர் இரண்டு விக்கெட்டுகளையும், சாம் கரண், ஹென்றி க்ரோகோம்ப், ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
முடிவில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முத்தரப்பு தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
The post ஆறுதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

