• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கச்சா எண்ணெய் விலை கண்ணு கட்டுதுடா சாமி.. விடிந்தது வந்த ஷாக்..!! | Crude Oil Shock: Brent Hits $118 as Geopolitical Tension Escalates — Will Petrol & Daily Essentials Get Expensive?

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கச்சா எண்ணெய் விலை கண்ணு கட்டுதுடா சாமி.. விடிந்தது வந்த ஷாக்..!! | Crude Oil Shock: Brent Hits $118 as Geopolitical Tension Escalates — Will Petrol & Daily Essentials Get Expensive?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கச்சா எண்ணெய் விலை கண்ணு கட்டுதுடா சாமி.. விடிந்தது வந்த ஷாக்..!!

அமெரிக்கா முதல் இந்தியா வரையில் கச்சா எண்ணெய்க்கும், எரிபொருளுக்கும் அதிகப்படியான தட்டுப்பாடு இருக்கும் வேளையில், அமெரிக்கா ராணுவம் மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பு ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறிவரும் வேளையில் உலக நாடுகள் முன்கூட்டியே அதிகளவில் எரிபொருளை வாங்கத் துவங்கியுள்ளனர்.

ஆனால் வளைகுடாவில் இருந்து வர வேண்டிய கச்சா எண்ணெய் ஈரான் படையினரால் முடக்கப்பட்டு உள்ள ஹார்முஸ் வழித்தடத்தாலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்கி வரும் காரணத்தால் எரிபொருள் சப்ளையும் தடைப்பட்டு உள்ளது. இதனால் எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை கண்ணு கட்டுதுடா சாமி.. விடிந்தது வந்த ஷாக்..!!

இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 118 டாலர் வரையில் உயர்ந்தது.

தற்போது வளைகுடாவில் இருந்து உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் சப்ளை செய்வது சவுதி அரேபியா மட்டுமே என்றாலும், ஹவுதி படையினர் தொடர்ந்து சவுதி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் பைப்லைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால் சவுதியிலும் உற்பத்தி மற்றும் சப்ளை அளவுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் தேர்தலுக்கு முன்பும் சரி அமெரிக்காவுடன் சேர்ந்து பெரும் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவதாக அறிவித்தது, ஆனால் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிட்டேரம் தேர்தல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.5 சதவீதம் உயர்ந்து 118 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 2.30 சதவீதம் உயர்ந்து 104 டாலராகவும் உயர்ந்துள்ளது.

இன்றைய உயர்வின் வாயிலாக அக்டோபர் மாதம் மட்டுமே இந்தியா அதிகளவில் வாங்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்து, 6 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அக்டோபர் மாதத்தில் முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் ஹார்முஸ் வழியாக அதிக எண்ணெய் கப்பல்கள் கச்சா எண்ணெய் உடன் வெளியேறி வருகிறது, ஆயினும் போர் அச்சம் காரணமாகத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

இதன் மூலம் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து, நாணய மதிப்பு சரிந்து பொருளாதாரம் உடைகிறது என்றால் மிகையில்லை.

உதாரணமாக நேற்று இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க முடியாத காரணத்தால் விமான கட்டணத்தை உயர்த்துவது தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை எனத் தெரிவித்தார்.

இதனால் எரிபொருள் பயன்படுத்தப்படும் அனைத்து உற்பத்தி பொருட்கள், சேவைகளின் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நீங்கள் வாங்கும் பால், காய்கறியில் துவங்கி ஹோம் டெலிவரி செய்யப்படும் பொருட்களின் சேவை கட்டணம் வரையில் அனைத்தும் அடக்கும்.

Share This Article

English summary

Crude Oil Shock: Brent Hits $118 as Geopolitical Tension Escalates — Will Petrol & Daily Essentials Get Expensive?

Crude Oil Shock: Brent Hits $118 as Geopolitical Tension Escalates — Will Petrol & Daily Essentials Get Expensive? — கச்சா எண்ணெய் விலை கண்ணு கட்டுதுடா சாமி.. விடிந்தது வந்த ஷாக்..!!

Story first published: Friday, October 30, 2026, 11:32 [IST]

Other articles published on Oct 30, 2026

Read More

Previous Post

நெதன்யாகுவிற்கு சாதகமாகும் களம்.. இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? 5 விஷயங்கள் நடக்க வாய்ப்பு | Favorable for Benjamin Netanyahu: Who will be Israel’s next Prime Minister? 5 possible scenarios to be happens next

Next Post

உக்ரைன் ரயில்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா… 13 பேருக்கு நேர்ந்த துயரம்! | World News (உலக செய்திகள்)

Next Post
உக்ரைன் ரயில்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா… 13 பேருக்கு நேர்ந்த துயரம்! | World News (உலக செய்திகள்)

உக்ரைன் ரயில்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா... 13 பேருக்கு நேர்ந்த துயரம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin