• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் 2027-க்கு முன் மும்பை அணியில் அதிரடி மாற்றம்.. லசித் மலிங்கா உட்பட 3 பயிற்சியாளர்கள் விலகல்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் 2027-க்கு முன் மும்பை அணியில் அதிரடி மாற்றம்.. லசித் மலிங்கா உட்பட 3 பயிற்சியாளர்கள் விலகல்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 29, 2026 6:05 PM IST

ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக புதிய பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகளில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது

லசித் மலிங்கா
லசித் மலிங்கா

ஐபிஎல் 2027 சீசனை எதிர்நோக்கித் தயாராகி வரும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் (Coaching Staff) அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அணியின் நட்சத்திரப் பந்துவீச்சுப் பயிற்சியாளரான இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்கா (Lasith Malinga), கூடுதல் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரஸ் மாம்பரே (Paras Mhambrey) மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் கார்ல் ஹாப்கின்சன் (Carl Hopkinson) ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகள் வீரராகப் பல வரலாற்று வெற்றிகளைத் தேடிக் கொடுத்த அவர், அதன் பிறகு 2018-ஆம் ஆண்டு முதல் பந்துவீச்சு ஆலோசகராகவும் (Bowling Mentor), ஷேன் பாண்டுக்குப் பிறகு 2024 சீசன் முதல் முதன்மை வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வந்தார். அதேபோல், பரஸ் மாம்பரே 2025 சீசனின் போதும், கார்ல் ஹாப்கின்சன் கடந்த மூன்று ஆண்டுகளாக பீல்டிங் பயிற்சியாளராகவும் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்துள்ளனர்.

இந்த மூவரின் விலகல் குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் அணியின் வெற்றிக்குப் பங்களித்த லசித் மலிங்கா, பரஸ் மாம்பரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் உருவாக்கிய நினைவுகளும் பிணைப்புகளும் எப்போதுமே எங்களது குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அணியின் நீண்டகால தலைமைப் பயிற்சியாளராக இருந்த மகேலா ஜெயவர்த்தனேவுக்குப் பதிலாக, நட்சத்திர வீரர் கீரோன் பொல்லார்ட் (Kieron Pollard) தலைமைப் பயிற்சியாளராகப் பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த பயிற்சியாளர் குழுக் கட்டமைப்பு மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக புதிய பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகளில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட புதிய ஆதரவுக் குழுவில் (Support Staff) சச்சின் டெண்டுல்கர் (ஐகான்), கீரோன் பொல்லார்ட் (தலைமைப் பயிற்சியாளர்), ஜூபின் பருச்சா (செயல்திறன் இயக்குனர்), ராகுல் சங்வி (கிரிக்கெட் இயக்குனர்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அதிரடி மாற்றங்கள் அணிக்கு எந்த மாதிரியான திருப்புமுனையைத் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read More

Previous Post

இவர்களை தண்டிக்காவிட்டால் பசுக்களே அழிந்துவிடும்.. மாட்டிறைச்சி வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை | Cow Slaughter Case: Gujarat court awards life sentence for 3 accused and judge says If not punished, Gau Mata will go extinct

Next Post

ஏஐ விட பெரிய பிரச்சனை.. உலகின் அடுத்த பெரிய நெருக்கடி ‘இதுதான்’.. இப்போதே ரெடியான சீனா..! | Next Global Crisis: Why China is Secretly Stockpiling Over Half the World’s Food Supply!

Next Post
ஏஐ விட பெரிய பிரச்சனை.. உலகின் அடுத்த பெரிய நெருக்கடி ‘இதுதான்’.. இப்போதே ரெடியான சீனா..! | Next Global Crisis: Why China is Secretly Stockpiling Over Half the World’s Food Supply!

ஏஐ விட பெரிய பிரச்சனை.. உலகின் அடுத்த பெரிய நெருக்கடி 'இதுதான்'.. இப்போதே ரெடியான சீனா..! | Next Global Crisis: Why China is Secretly Stockpiling Over Half the World’s Food Supply!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin