• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி: வெடித்த புதிய சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி: வெடித்த புதிய சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராசபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி
சட்டத்தரணி அலி சப்ரி வெளியிட்ட கருத்து தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய
குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கொழும்பு நீதவான்
நீதிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளது


“இன்று அடக்குமுறையாளர்களாக செயற்படுபவர்கள் நாளை பாதிக்கப்பட்டவர்களாக
மாறக்கூடும்” என அலி சப்ரி தெரிவித்திருந்தார்.


இந்த கூற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவையா, அதன் விசாரணை அதிகாரிகளையா அல்லது
வழக்கில் சாட்சியமளிப்பவர்களையா இலக்கு வைத்து கூறப்பட்டது என ஆணைக்குழு
சார்பில் முன்னிலையான சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் தனுஜா பண்டார மன்றில் கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்படக்கூடிய நபர்கள்



நாமல் ராசபக்ச மற்றும் மற்றைய சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன ஆகியோர்
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரே, அச்சுறுத்தல் பயமின்றி உண்மையைக் கூற
இரண்டு சாட்சிகள் முன்வந்ததாக ஆணைக்குழு மன்றில் சுட்டிக்காட்டியது.

நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி: வெடித்த புதிய சர்ச்சை | Bribery Commission Questions Ali Sabry S Remarks

இந்த நிலையில், அலி சப்ரி குறிப்பிட்ட “பாதிக்கப்படக்கூடிய நபர்கள்” இந்த
சாட்சிகளா என்றும் ஆணைக்குழு வினவியது.


எனினும்,தனது கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அலி
சப்ரி, ஜனாதிபதியின் அண்மைய உரைகளைக் குறிப்பிட்டுப் பதிலளித்தார்.


மேலும், அரசியலமைப்பின் 13(5) பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்றும், நீதித்துறையும்
ஆணைக்குழுவும் சுயாதீனமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதய அறுவை சிகிச்சை


நாமல் ராஜபக்ஷவின் தாயாருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதையும், பெற்றோர்
இருவரினதும் உடல்நலக் குறைவையும் விசேட காரணியாக முன்வைத்து பிணை கோரப்பட்டது.

நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி: வெடித்த புதிய சர்ச்சை | Bribery Commission Questions Ali Sabry S Remarks


இருப்பினும், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக் கூறி ஆணைக்குழு
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.


இரண்டு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ்.
போதரகம, நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 3 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்தார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சுமார் 700 ஆசிரியர்களுக்கு உளவியல் ஆதரவு தேவை என அடையாளம் காணப்பட்டுள்ளது | Makkal Osai

Next Post

8th Pay Commission | 8-வது ஊதியக் குழு; 7% உயர்வு என்றால் ஊழியர்களின் சம்பளம் ரூ.1,21,068ஆக உயருமா? கணக்கீடு இதோ.! | வணிகம் போட்டோகேலரி

Next Post
8th Pay Commission | 8-வது ஊதியக் குழு; 7% உயர்வு என்றால் ஊழியர்களின் சம்பளம் ரூ.1,21,068ஆக உயருமா? கணக்கீடு இதோ.! | வணிகம் போட்டோகேலரி

8th Pay Commission | 8-வது ஊதியக் குழு; 7% உயர்வு என்றால் ஊழியர்களின் சம்பளம் ரூ.1,21,068ஆக உயருமா? கணக்கீடு இதோ.! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin