Jio ஐபிஓ இருக்கட்டும்.. முதல்ல இதை படிங்க.. ஜியோ பங்கு விலை அடுத்து என்னாகும் தெரியுமா..?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு 2வது நாளில் 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. முதல் நாள் வர்த்தகத்தில் சுமார் 21.36 சதவீதம் உயர்ந்து 1,417 ரூபாய் வரையில் உயர்ந்து நேற்றைய வர்த்தகம் முடிந்த நிலையில் இன்று அதிரடியான உயர்வை பதிவு செய்துள்ளது.
2வது நாள் வர்த்தகத்தில் (இன்று) ஜியோ பங்குகள் சுமார் 5.5 சதவீதம் உயர்ந்தது மூலம் ஜியோ பங்கு விலை 1,490.00 ரூபாய் வரையில் உயர்ந்து ஐபிஓ விலையை காட்டிலும் கிட்டத்தட்ட 33 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஜியோ ஐபிஓ-வில் அலாட்மென்ட் கிடைக்க முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆனால் ப்ரோகரேஜ் நிறுவனங்கள் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவன பங்குகள் குறித்து வெளியிட்ட கணிப்பு என்ன தெரியுமா..?
நோமூரா, மோத்திலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ், எல்ரா கேப்பிடல், டோலாட் கேப்பிடல் ஆகியவை ஜியோ பட்டியலிட்ட பின்பு தனது கணிப்புகளை வெளியிட துவங்கியது.
இன்றைய முதலீட்டு சந்தை சூழ்நிலையில் ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு அதை வெற்றிகரமாக முடிப்பது என்பது பெரும் சவலான காரியமாக உள்ளது. பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்காக செபியிடம் DRHP அறிக்கையை சமர்ப்பித்த பின்பும், செபி ஒப்புதல் அளித்த பின்பும் சந்தை சூழ்நிலையை கருத்தில் கொண்டு பின்வாங்கிய கதை சிறு நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் பெரிய நிறுவனங்களுக்கும் நடந்துள்ளது.
அடுத்தகட்டமாக ஐபிஓ வெளியிட்ட பின்பு முதலீட்டு நிறுவனங்களும், ப்ரோகரேஜ் நிறுவனங்களும் வெளியிடும் கணிப்புகள் தான் அந்த பங்கின் வளர்ச்சிக்கு, வீழ்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும்.
இந்த வகையில் முன்னணி ப்ரோகரேஜ் நிறுவனங்களான நோமுரா, மோதிலால் ஆஸ்வால், எல்ரா கேப்பிடல் ஆகியவை ஜியோ பங்குகளுக்கு BUY ரேட்டிங் கொடுத்ததுள்ளது, இதேபோல் ஜியோ பங்குகள் பட்டியலிடப்பட்ட பின்பு 20-22 சதவீதம் வரையில் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது.
இதேபோல் டோலாட் கேப்பிடல் நிறுவனம் Accumulate ரேட்டிங் கொடுத்து இப்பங்குகள் 28 சதவீதம் வரையில் உயரும் என கணித்துள்ளது.
இந்த அதிகப்படியான பங்கு விலை உயர்வு கணிக்க முக்கிய காரணமாக இந்த ப்ரோகரேஜ் நிறுவனங்கள் கூறுவது என்ன தெரியுமா..?
இந்திய டெலிகாம் சந்தையில் டேட்டா வர்த்தகத்தில் 60 சதவீதமும், டெலிகாம் வாடிக்கையாளர்களில் அதிக எண்ணிக்கையும் கொண்டு உள்ளது. இதனால் ஜியோ price setter என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது, அதாவது ஜியோ விலை உயர்த்தும் போது அனைத்து டெலிகாம் சேவை நிறுவனமும் விலையை உயர்த்தும், குறைத்தாலும் இதே நிலை தான்.
இதனால் பார்தி ஏர்டெல் காட்டிலும் ஜியோ பங்குகள் ப்ரீமியம் விலையில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கிறது. இதனால் ஜியோ பங்குகள் தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என ப்ரோகரேஜ் நிறுவனங்கள் கணித்துள்ளது.

