DMART-க்கு போட்டி.. 24 வருடம் செய்ததை ஒரு கடை கூட இல்லாமல் சாதித்தது Blinkit.. எப்படி..?
இந்திய ரீடைல் சந்தையில் குவிக் காமர்ஸ் சந்தை மிகப்பெரிய மாற்றத்தைச் செய்து வருகிறது, சிறு நகரங்களில் இதன் தாக்கம் மிகவும் குறைவு என்றாலும் பெரு நகரங்களில் மளிகைக் கடைகளை மாயம் செய்யும் மந்திரவாதியாக மாறியுள்ளது இந்த குவிக் காமர்ஸ் துறை.
இந்திய மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்த டிமார்ட் 24 வருடமாகப் போராடி படிப்படியாக உருவாக்கிய வர்த்தகத்தை பிளிங்கிட் போன்ற குவிக் காமர்ஸ் துறை ஒரு கடை கூட திறக்காமல் டிராக் ஸ்டோர் வாயிலாகவே சாதித்துள்ளது.

டிமார்ட் கடந்த 24 வருடத்தில் 518 கடைகள் திறந்து ஜூலை – செப்டம்பர் 2026 காலாண்டுக்கு 19,206 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி வருகிறது, இதேவேளையில் பிளிங்கிட் நிறுவனம் ஒரு ரீடைல் கடை கூட திறக்காமல் 19,152 கோடி அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது.
வெறும் 54 கோடி மட்டுமே வித்தியாசம், இதேபோல் கடந்த ஒரு வருடத்தில் டிமார்ட் வளர்ச்சி என்பது 18 சதவீதம் மட்டுமே, ஆனால் Blinkit 94 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சரி உண்மையில் யார் வெற்றியாளர்..?
டிமார் செப்டம்பர் காலாண்டில் புதிதாகச் சேர்த்த 15 கடைகள் உடன் 518 கடைகள் மூலம் ஒரு நாளுக்குச் சராசரியாக ஒரு கடையில் 40 லட்சம் வரையிலான வர்த்தகம் நடக்கிறது, 3 மாதத்தில் 11.1 பில்கள் அதாவது வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதுவே Blinkit-ஐ பார்த்தா 2751 டார்க் ஸ்டோர் வைத்துக்கொண்டு ஒரு நாளுக்கு ஒரு ஸ்டோருக்கு சராசரியாக 9 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது, ஒவ்வொரு மாதமும் 3.7 கோடி பேர் பொருட்களை வாங்குகிறார்கள்.
டிமார்ட், Blinkit இரண்டும் இரு மாறுபட்ட வர்த்தக மாடல், வர்த்தக முறையைக் கொண்டு இருந்தாலும்.. விற்பனை செய்யும் பொருட்கள், வாடிக்கையாளர்கள், சந்தை என அனைத்தும் ஒன்றே.
இந்த நிலையில் ரீடைல் சந்தையில் யார் கிங்மேக்கர் என்பதை நிர்ணயம் செய்த நிதி நிலையைத் தான் பார்க்க வேண்டும். டிமார்ட் EBITDA என்பது 1403 கோடி ரூபாய், அதாவது ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 7.30 ரூபாய் சம்பாதிக்கிறது, இதுவே பிளிக்கிட்-ன் EBITDA அளவு வெறும் 184 கோடி மட்டுமே. அதாவது 100 ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்தால் வெறும் 1 ரூபாய் பெறுகிறது.
Blinkit காட்டிலும் டிமார்ட் 7 மடங்கு அதிகம் சம்பாதித்து வருகிறது. சரி இனி வரும் காலகட்டத்தில் எப்படி இருக்கும்..?
Blinkit பெரு நகரங்களில் ஏற்கனவே 5 சதவீத மார்ஜின் அளவீட்டைத் தொட்டு உள்ளது, தொடர்ந்து 6 காலாண்டுகளாக மார்ஜின் அளவு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதேநேரத்தில் டிமார்ட் மார்ஜின் 7.6 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக குறைந்துள்ளது.
இப்போ சொல்லுங்க யாரு கெத்து..?
டிமார்ட் பட்ஜெட் குடும்பத்திற்கு ஜாக்பாட், ஆனா Blinkit முழுக்க முழுக்க பாஸ்ட், வசதியானது. வருமானம் அடிப்படையில் டிமார்ட் கிங், ஆனால் வேகமாக வளர்ச்சி, மார்ஜின் வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் Blinkit கிங்.
அனைத்தையும் தாண்டி டிமார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் பெரிய அளவில் வெற்றி பெறாமல் இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது, இதோடு இரு நிறுவனங்களின் வர்த்தக காலமும், வளர்ச்சியின் வேகத்தைப் பார்க்கும் போது Blinkit உண்மையில் பாராட்டுக்குரியது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
