Last Updated:
இந்தியாவின் தொழில் உற்பத்தி குறியீடு செப்டம்பரில் 6.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளின் வலுவான வளர்ச்சியே இதற்குக் காரணம்.
இந்தியாவின் தொழில் உற்பத்தி குறியீடு 6.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தொழில் உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள் மாதந்தோறும் 28-ம் தேதி வெளியிடப்படுகின்றன. ஒருவேளை, 28-ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளில் வெளியிடப்படும் .
இதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறியீடுகளில், முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு உற்பத்தித் துறையில் ஏற்பட்ட 7.6% வளர்ச்சியும், மின்சாரம்,எரிவாயு விநியோகத் துறையில் ஏற்பட்ட 11.2% வலுவான வளர்ச்சியும் முக்கியக் காரணங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,” பல்வேறு முகமைகளிடமிருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு இந்தக் குறியீடு தொகுக்கப்படுகிறது. அந்த முகமைகள் உற்பத்தி ஆலைகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெறுகின்றன. தொழில் உற்பத்திக்கு குறியீடுகளின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் பிற்கால வெளியீடுகளில் திருத்தியமைக்கப்படலாம்.
செப்டம்பர் 2026 மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக உள்ளது. ஆகஸ்ட் 2026 மாதத்தில் இது 8.0 சதவீதமாக (விரைவு மதிப்பீடு) இருந்தது. ஆகஸ்ட் 2026 மாதத்தைப் பொறுத்தவரை, சுரங்கம், கல் குவாரி, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு விநியோகம், நீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை ஆகிய துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே (-) 6.2 சதவீதம், 7.6 சதவீதம், 11.2 சதவீதம் மற்றும் 5.8 சதவீதம்” என்று தெரிவித்துள்ளது.


