ஸ்பெயினின் டொலிடோ பகுதியில் இரு அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்ரிட்டிலிருந்து செவில்லே நோக்கி ஒரே திசையில் பயணித்த ரயில்களில், பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பின்பகுதியில் மற்றொரு ரயில் அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
தீயணைப்புப் படையினர்
விபத்து இடம்பெற்றபோது, ஒரு ரயிலில் 397 பயணிகளும் மற்றொரு ரயிலில் 147 பயணிகளும் இருந்துள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மீட்புப் பணிகளில் மருத்துவ ஹெலிகொப்டர்கள், அம்புலன்ஸ்கள், இராணுவ அவசரகாலப் பிரிவினர், தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

