• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சீனாவை வைத்து.. “உளவியல்” போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி! | India China Border Tensions: Old Videos now Circulate as Psychological Warfare Claims Emerge

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சீனாவை வைத்து.. “உளவியல்” போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி! | India China Border Tensions: Old Videos now Circulate as Psychological Warfare Claims Emerge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Updated: Tuesday, October 27, 2026, 12:47 [IST]

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே எல்லை பகுதியில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மோதல் தொடர்பாக பழைய வீடியோக்கள் பரவி வருகிறது. இது ஏதோ சிலர் வியூஸ்களுக்காக பழைய வீடியோக்களை பரப்புவது இல்லை. திட்டமிட்டு இந்தியர்கள் மீது நடத்தப்படும் உளவியல் போர் என்கிறார்கள் வல்லுநர்கள். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

இந்தியா சீனா இடையே எல்லையில் அவ்வப்போது மோதல் இருக்கவே செய்யும். 2020 கல்வான் மோதலுக்கு பிறகு நிலைமை நார்மல் ஆக பல ஆண்டுகள் வரை ஆனது. இப்போது தான் இரு தரப்பிற்கும் இடையே நிலைமை சுமுகமடைந்து வரும் நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

India China Border Tensions India China

பரவும் வீடியோ

இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக பழைய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்திய ராணுவம் பின்னடைவை சந்தித்ததாகவும், சீன படைகள் இந்திய பகுதிகளைக் கைப்பற்றியதாகவும் பரவும் இந்த வீடியோக்களை ஏற்கனவே இந்திய ராணுவத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு மறுத்துள்ளது.

இந்தியா, சீனா இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மாறுபட்ட புரிதல்கள் உள்ளன. ஜூலை மாதம் முதலே அருணாச்சல பிரதேசத்தின் பல இடங்களில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டதாக இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை இயக்குநர் ஜெனரல் சத்ருஜீத் கபூர் அக்டோபர் 22ம் தேதி தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தவறான தகவல்கள் பரவுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வீரர்கள்

அருணாச்சல பிரதேசத்தின் அசாபிலா, லோங்ஜு, தக்சிங் பகுதிகளை சீனா கைப்பற்றிவிட்டதாகவும், இந்திய வீரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா கூறியதாக ஒரு வீடியோ பரவியது. ஆனால், இது பழைய வீடியோவாகும். 2023 அக்டோபர் 27ம் தேதி ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலிருந்து வீடியோவை கட் செய்து பரப்பி வருகிறார்கள்.

அப்போது ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது குறித்து பேசிய காலியா, அருணாச்சல பிரதேசம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரது பேச்சு டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு போலியால பரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், இந்திய வீரர்களை சீன ராணுவத்தினர் சோதனை செய்வதாக பரவிய வீடியோவிலும் உண்மை இல்லை. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே தேவனஹள்ளியில் 2026 மே மாதம் நடைபெற்ற பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை தான் இதுபோல போலியாக பரப்பி வருகிறார்கள்.

போலி தகவல்

இது தவிர லடாக்கில் இந்திய வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பரவிய தகவலையும் ராணுவம் மறுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சியாங் அணைத் திட்டத்துக்கு எதிராக அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற போராட்ட வீடியோக்களை, ஏதோ இந்திய ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராடுவது போல மாற்றி அமைத்து பரப்பி வருகிறார்கள்.

மேலும், கடந்த அக்டோபர் 26ம் தேதி, சிக்கிமின் நாதுலா பகுதியில் சீனாவின் சரக்கு வாகனங்கள் சென்ற காட்சிகளை வைத்து, சீன வாகனங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால், அது ஏதோ அத்துமீறி நுழைந்த வாகனங்கள் எல்லாம். வழக்கமான சரக்கு போக்குவரத்து தான் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

12 அக்கவுண்ட்

இதுபோல போலியான தகவல்களை திட்டமிட்டு பரப்பும் 12சமூக வலைத்தள கணக்குகளையும் மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மிக பெரிய மோதல் ஏற்படலாம் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மனோஜ் குமார் கட்டியார் கூறுவது போன்ற ஒரு போலியான வீடியோவும் பரவி வருகிறது. இருப்பினும், அதிலும் உண்மை இல்லை!

உளவியல் போர்

இதுபோன்ற வீடியோக்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடைய கணக்குகள் மூலம் பரப்பப்பட்டதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக ஏஐ மூலம் போலியான வீடியோ பரப்பப்பட்டது. அதேபோல திட்டமிட்டு போலியான வீடியோக்களை இப்போதும் பரப்பி வருகிறார்கள். இது பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்தும் உளவியல் போராக இருக்கலாம் என்கிறார்கள். இருப்பினும், இந்த போலி வீடியோக்களில் சீனாவின் பங்கு இருக்கிறதா என்பதில் தெளிவான ஆதாரங்கள் இல்லை.

பொய்யான தகவல்கள் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைப்பதும், ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்துவதும் தான் இதன் நோக்கம். எனவே, எல்லைப் பகுதியில் பதற்றம் என வீடியோக்களை ஷேர் செய்யும் முன்பு அவை பழைய வீடியோக்களா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்!

English summary

Old and misleading videos claiming Indian military setbacks and Chinese incursions in Arunachal Pradesh(இந்தியா சீனா இடையே வெடிக்கும் மோதல்): India China Border Tensions latest news in tamil.

Read More

Previous Post

‘அர்னாப் புயலின் தீவிரம்: இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Next Post

பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்.. அடுத்த 20 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. அதிர்ச்சி கொடுக்கும் கணிப்பு! | Bill Gates’ Chilling Warning: The Next 20 Years Will Be the Most Tumultuous in Human History Due to AI & Robots!

Next Post
பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்.. அடுத்த 20 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. அதிர்ச்சி கொடுக்கும் கணிப்பு! | Bill Gates’ Chilling Warning: The Next 20 Years Will Be the Most Tumultuous in Human History Due to AI & Robots!

பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்.. அடுத்த 20 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. அதிர்ச்சி கொடுக்கும் கணிப்பு! | Bill Gates’ Chilling Warning: The Next 20 Years Will Be the Most Tumultuous in Human History Due to AI & Robots!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin