லக்னோவில் காரை நிறுத்துவது தொடர்பான தகராறில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு தரப்பைச் சேர்ந்த ரிஷப் சுக்லா (வயது 30) என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த சுப்பாக்கியால் எதிர் தரப்பினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில், சிவாஜி திவாரி (வயது 62), ஷிவேந்திர திவாரி (வயது 55) மற்றும் சுயாஷ் திவாரி (வயது 30) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விசாரணை
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் நான்கு காலி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த படுகொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அந்தப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு நிலை கட்டுப்பாட்டில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



