• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

AI பிரிவில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ் நிறுவனம்: இப்போது இன்போசிஸ் பங்கில் முதலீடு செய்யலாமா? | Infosys Share Price Falls After Q2 Results: Should You Buy? UBS Sets ₹1,415 Target

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
AI பிரிவில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ் நிறுவனம்: இப்போது இன்போசிஸ் பங்கில் முதலீடு செய்யலாமா? | Infosys Share Price Falls After Q2 Results: Should You Buy? UBS Sets ₹1,415 Target
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


AI பிரிவில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ் நிறுவனம்: இப்போது இன்போசிஸ் பங்கில் முதலீடு செய்யலாமா?

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் (Infosys) நிறுவனத்தின் பங்கு திடீரென சரிவை கண்டது. இதற்கு என்ன காரணம்? இப்போது இன்போசிஸ் பங்கினை வாங்கலாமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்போசிஸ் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் நிதி முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை விட குறைவாக இருந்ததோடு, முழு ஆண்டு வருவாய் வளர்ச்சி கணிப்பும் குறைக்கப்பட்டுள்ளதால், காலை வர்த்தகம் தொடங்கும் போதே இன்போசிஸ் பங்கு விலை சரிவை சந்தித்தது. ஒரு பங்கின் விலை 1134 ரூபாய் வரை சரிந்து சந்தை முடியும் போது 1166 ரூபாய் என்ற விலையில் இருந்தது.

AI பிரிவில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ் நிறுவனம்: இப்போது இன்போசிஸ் பங்கில் முதலீடு செய்யலாமா?

ஏற்கனவே ஐடி பங்குகள் பலத்த அடி வாங்கி அதில் இருந்து இப்போது தான் மீண்டு வர தொடாங்கியுள்ளன. இதனால் ஐடி நிறுவன காலாண்டு முடிவுகள் சந்தையில் மிகவும் கவனம் பெற்றுள்ளன. இன்போசிஸ் நிறுவனம் Constant Currency அடிப்படையில் கடந்த காலாண்டை விட 1.2% வருவாய் வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது சந்தை வல்லுநர்களின் ஒட்டுமொத்த கணிப்பான 1.8% அளவை விட குறைவாகும்.மேலும் நிறுவனத்தின் EBIT மார்ஜின் முந்தைய காலாண்டை விட 10 அடிப்படை புள்ளிகள் குறைந்து 21% ஆக சரிந்துள்ளது. இது UBS கணித்த 21.3% மற்றும் சந்தை கணிப்பான 21.2% அளவை விடக் குறைவு.

இருந்தாலும் இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 7,823 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதே வேளையில் நடப்பு நிதி ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி கணிப்பை திருத்தி அமைத்துள்ளது. இதன்படி, Constant Currency அடிப்படையில் வருவாய் வளர்ச்சி 1 முதல் 2 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னணி தரகு நிறுவனமான UBS இன்போசிஸ் பங்கின் மீது தொடர்ந்து Buy ரேட்டிங்கை பரிந்துரைத்துள்ளது. ஒரு பங்கின் விலை 1415 ரூபாயை தொடும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது இன்றைய விலையிலிருந்து சுமார் 23 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக UBS தெரிவித்துள்ளது.

HSBC தரகு நிறுவனம், இன்போசிஸ் நிறுவனத்தின் லாப வரம்புகளில் சவால்கள் நீடிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இன்போசிஸ் நிறுவனம் ஏஐ சேவைகளில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஏஐ துறையின் மூலம் கிடைக்கும் வருவாய் காலாண்டு அடிப்படையில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த வருவாயில் ஏஐ பிரிவின் பங்களிப்பு முந்தைய ஜூன் காலாண்டில் 8.2% ஆக இருந்து, செப்டம்பர் காலாண்டில் 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் மந்தமாக இருந்ததாலும், வருவாய் கணிப்பு குறைக்கப்பட்டதாலும் பங்கு விலை சற்றே அழுத்தத்தை சந்தித்தது. இருந்தாலும் UBS போன்ற தரகு நிறுவனங்கள் ஏஐ பிரிவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பங்கினை வாங்குவது லாபகரமானதாக இருக்கும் என பரிந்துரைக்கின்றன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Infosys Share Price Falls After Q2 Results: Should You Buy? UBS Sets ₹1,415 Target

Infosys shares came under pressure after its second-quarter revenue growth and operating margin missed market expectations and the company lowered its full-year growth outlook./ இன்போசிஸ் ஐடி நிறுவன பங்கு: இப்போது வாங்கலாமா? தரகு நிறுவனங்கள் சொல்வது என்ன?

Story first published: Monday, October 26, 2026, 16:03 [IST]

Other articles published on Oct 26, 2026

Read More

Previous Post

தங்கம் விலை குறைந்ததும் கூடிய மக்கள்.. காய்கறி மார்க்கெட்டை மிஞ்சிய கூட்டம்! சீனாவில் என்ன நடக்குது | Gold Price Drop in China.. Why Are Record Crowds Rushing to Buy Gold, and What’s Behind the Rush?

Next Post

2027-ம் ஆண்டிலும் கச்சா எண்ணெய் விலை குறையாது? வெளியான அதிர்ச்சி தகவல்! | World News (உலக செய்திகள்)

Next Post
2027-ம் ஆண்டிலும் கச்சா எண்ணெய் விலை குறையாது? வெளியான அதிர்ச்சி தகவல்! | World News (உலக செய்திகள்)

2027-ம் ஆண்டிலும் கச்சா எண்ணெய் விலை குறையாது? வெளியான அதிர்ச்சி தகவல்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin