• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தங்கம் விலை குறைந்ததும் கூடிய மக்கள்.. காய்கறி மார்க்கெட்டை மிஞ்சிய கூட்டம்! சீனாவில் என்ன நடக்குது | Gold Price Drop in China.. Why Are Record Crowds Rushing to Buy Gold, and What’s Behind the Rush?

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தங்கம் விலை குறைந்ததும் கூடிய மக்கள்.. காய்கறி மார்க்கெட்டை மிஞ்சிய கூட்டம்! சீனாவில் என்ன நடக்குது | Gold Price Drop in China.. Why Are Record Crowds Rushing to Buy Gold, and What’s Behind the Rush?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Updated: Tuesday, October 27, 2026, 7:00 [IST]

பெய்ஜிங்: தங்கம் விலை குறைந்தால் நகை வாங்கலாம் என்று பலரும் காத்திருப்பார்கள்.,ஆனால், விலை குறைந்ததும் மக்கள் கூட்டம் ஒரு மார்க்கெட்டையே திக்குமுக்காட வைத்து விட்டது என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்? சீனாவில் தங்கம் வாங்குவதற்காக மக்கள் குவிந்துள்ள காட்சிகள்தான் இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளன. இதற்கு பின்னாலுள்ள காரணம் என்ன?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததை தொடர்ந்து, சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள ஷூய்பே தங்கச் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. தங்க நகைகளை வாங்குவதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால், கடைகளின் பிளாட்பாரத்தில் நகர முடியாத அளவுக்குக் கூட்டம் காணப்பட்டது.

இந்த கூட்டம் தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் சீன சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றைப் பார்த்த ஒருவர், “காய்கறி மார்க்கெட்டில் இருப்பதைவிட இங்கு தங்கம் வாங்குவதற்காக அதிகமான மக்கள் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Gold Price Drop in China

விலை குறைந்தது ஏன்?

சர்வதேச சந்தையில் அக்டோபர் 23-ம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டாலருக்குக் கீழே சரிந்தது. அன்றைய வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,995.63 டாலராக இருந்தது. முந்தைய விலையுடன் ஒப்பிடும்போது 0.72 சதவீதம் குறைந்தது.

அந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 4 சதவீதம் சரிந்தது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக இது அமைந்தது.

இதன் தாக்கம் சீனாவிலும் எதிரொலித்தது. அக்டோபர் 24-ம் தேதி, சில முன்னணி நகை நிறுவனங்கள் தங்க நகைகளின் விலையை ஒரு கிராமுக்கு 6 முதல் 12 யுவான் வரை குறைத்தன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சில்லறை விற்பனையில் தங்க நகைகளின் விலை ஒரு கிராமுக்கு சுமார் 100 யுவான் வரை குறைந்திருந்தது. இதனால், விலை குறையக் காத்திருந்தவர்கள் நகைகளை வாங்கச் சந்தைக்கு வந்துள்ளனர்.

 Gold Rate Today: கடந்த வாரம் 4,000 குறைந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளான இன்று சர்ரென உயர்வு!

Gold Rate Today: கடந்த வாரம் 4,000 குறைந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளான இன்று சர்ரென உயர்வு!

சேமிப்பாகும் தங்கம்

சீனாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல.. பணத்தை சேமித்து வைப்பதற்கான ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது. வீடுகள் தொடர்பான சொத்துச் சந்தை பலவீனமாக இருப்பது, பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள், வங்கி டெபாசிட்களுக்குக் கிடைக்கும் குறைந்த வருவாய் ஆகிய காரணங்களால் சில குடும்பங்கள் தங்களுடைய சேமிப்பைத் தங்கத்தில் வைத்திருக்க விரும்புகின்றன.

குறிப்பாக, திருமணத்துக்காக நகை வாங்க வேண்டியவர்கள், பழைய நகைகளை மாற்ற விரும்புபவர்கள், தங்களுடைய பயன்பாட்டுக்காக நகை வாங்கத் திட்டமிட்டவர்கள் எனப் பலரும் விலை குறைந்ததைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் தங்களுக்கு பிடித்த நகைகளை முன்கூட்டியே தேர்வு செய்துவிட்டு, விலை குறைந்ததும் வாங்குகிறார்கள். தங்கக் கட்டிகளை வாங்கி நீண்டகாலம் வைத்திருக்கவும் சிலர் திட்டமிட்டுள்ளனர்.

அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி விலை! ₹2 லட்சத்துக்கு கீழே வெள்ளி: காரணம் என்ன? முழு விவரம்!

அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி விலை! ₹2 லட்சத்துக்கு கீழே வெள்ளி: காரணம் என்ன? முழு விவரம்!

தங்க மார்க்கெட்டில் கூட்டம்

ஷென்செனில் உள்ள ஷூய்பே தங்க சந்தை, சீனாவின் முக்கியமான தங்கம் மற்றும் நகை வர்த்தக மையங்களில் ஒன்றாகும். இங்கு மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நகை தயாரிப்பாளர்கள் எனப் பலரும் செயல்பட்டு வருகிறார்கள்.

சீனாவின் தேசிய தின விடுமுறையின்போதும் இந்தச் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது தினசரி வருகை தருவோரின் எண்ணிக்கை சுமார் 60,000-ஐ நெருங்கியதுடன், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையும் 28 சதவீதம் அதிகரித்தது.

தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மீண்டும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், விலை குறைந்ததும் அதை வாங்குவதற்காக மக்கள் குவிந்திருப்பது சீனாவில் தங்கத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

English summary

Gold Price Drop in China.. Why Are Record Crowds Rushing to Buy Gold, and What’s Behind the Rush?

Read More

Previous Post

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

Next Post

AI பிரிவில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ் நிறுவனம்: இப்போது இன்போசிஸ் பங்கில் முதலீடு செய்யலாமா? | Infosys Share Price Falls After Q2 Results: Should You Buy? UBS Sets ₹1,415 Target

Next Post
AI பிரிவில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ் நிறுவனம்: இப்போது இன்போசிஸ் பங்கில் முதலீடு செய்யலாமா? | Infosys Share Price Falls After Q2 Results: Should You Buy? UBS Sets ₹1,415 Target

AI பிரிவில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ் நிறுவனம்: இப்போது இன்போசிஸ் பங்கில் முதலீடு செய்யலாமா? | Infosys Share Price Falls After Q2 Results: Should You Buy? UBS Sets ₹1,415 Target

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin