
க்ரிஷ் (Krrish) பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை, கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (23) நிராகரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

