பிரான்ஸில் தீவிர இடதுசாரி அமைப்புகள் மற்றும் வன்முறையாளர்களால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத போராட்டங்களுக்கு வரவிருக்கும் நாட்களில் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு கடந்த வாரம் இடம்பெற்ற நாட்டின் மிக மோசமான நகர்ப்புறக் கலவரங்கள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்ட சம்பவங்களுக்கு மக்ரோன், தீவிர இடதுசாரிக் குழுக்களையே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வர்த்தக நிறுவனங்கள்
இந்தநிலையில், உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடனான அவசரச் சந்திப்பிற்குப் பிறகு உரையாற்றிய மக்ரோன், வரும் நாட்களில் அனுமதிக்கப்படாத வன்முறை சார்ந்த போராட்டங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வர்த்தக நிறுவனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்படும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மாற்றுப் பாதைகளில் நடைபெற அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை தீவிர இடதுசாரிக் குழுக்களால் அரசியல் மற்றும் கிளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பிரான்ஸ் குடியரசைக் கவிழ்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாகும் எனவும் மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

