• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.30,213 கோடியைத் திரட்ட களமிறங்கும் ஜியோ: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.30,213 கோடியைத் திரட்ட களமிறங்கும் ஜியோ: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 21, 2026 12:39 PM IST

இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் ஜியோ பிளாட்பார்ம்ஸின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு உச்ச வரம்பின் அடிப்படையில் சுமார் 10.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

News18
News18

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைக் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (IPO) பொது மக்களின் சந்தாவுக்காக இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஐபிஓ வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் நிறுவனம் மொத்தம் 30,213 கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த பொதுப் பங்கு வெளியீடு அக்டோபர் 23 அன்று நிறைவடைய உள்ளது.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓவிற்கான பங்கு விலை வரம்பு (Price Band) ஒரு பங்குக்கு 1,065 முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச முதலீட்டிற்கான ஒரு லாட் (Lot Size) அளவு 12 பங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் உச்ச வரம்பின்படி, சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 13,428 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

இந்த புதிய பங்கு வெளியீடு சுமார் 27 கோடி ஈக்விட்டி பங்குகளின் புதிய தொகுப்பைக் கொண்டுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள பங்குதாரர்களின் பங்குகளை விற்கும் (OFS) நடைமுறை இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் ஜியோ பிளாட்பார்ம்ஸின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு உச்ச வரம்பின் அடிப்படையில் சுமார் 10.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாகப் பட்டியலிடப்பட்டால், இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இது உருவெடுக்கும்.

மேலும், அனைத்து ஒதுக்கீட்டு முறைகளும் நிறைவடைந்த பிறகு, இதன் பங்குகள் மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகியவற்றில் அக்டோபர் 28 அன்று அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குச் சந்தை வட்டாரங்களிலும், கிரே மார்வெட் நிலவரங்களிலும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்குகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சாம்பல் சந்தை நிலவரப்படி, இதன் பங்குகள் 22 முதல் 23 சதவீதம் வரை பிரீமியம் விலையில் வர்த்தகமாகி வருகின்றன.

இது ஏறத்தாழ 22% முதல் 23% வரையிலான உடனடி பட்டியலிடும் லாபத்தை (Listing Gain) பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொது மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, கடந்த அக்டோபர் 19 அன்று நடைபெற்ற ஆங்கர் முதலீட்டாளர்கள் (Anchor Investors) சுற்றில் பிளாக்ராக், ஃபிடிலிட்டி உள்ளிட்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 8,109.84 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.

மோதிலால் ஓஸ்வால், எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ், எம்கே குளோபல் உள்ளிட்ட முன்னணி தரகு நிறுவனங்கள் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், வலுவான 5G நெட்வொர்க் மற்றும் உயர்ந்து வரும் லாப வரம்பு (EBITDA Margin) ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி இந்த ஐபிஓவை வாங்க பரிந்துரைத்துள்ளன.

Read More

Previous Post

டெல்லியில் ராவண வத நிகழ்ச்சி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பங்கேற்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலிவு விலையில் N95 முகக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும்; புகைமூட்டம் நிலவும் காலத்தில் பணியிடங்களில் பாதுகாப்பு அவசியம் – சாண்டியாகோ – Malaysiakini

Next Post

மலிவு விலையில் N95 முகக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும்; புகைமூட்டம் நிலவும் காலத்தில் பணியிடங்களில் பாதுகாப்பு அவசியம் – சாண்டியாகோ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin