• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் சிறைத் தண்டனை : நீதியமைச்சர் விளக்கம்

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் சிறைத் தண்டனை : நீதியமைச்சர் விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கருத்து தெரிவித்துள்ளார்.



குறித்த சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவரும் வதந்திகளால் மக்கள் மத்தியில் நிலவும் தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இன்று (20) நாடாளுமன்றில் அவர் விசேட விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் ஊடாக, நாட்டில் புற்றுநோயைப் போலப் பரவியுள்ள ஐஸ் மற்றும் இதர போதைப்பொருள் கடத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் சொத்துச் சேதங்களை முழுமையாக ஒழிப்பதற்குத் தேவையான சட்ட வலுவை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது.

 சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள்  




எனினும், இத்தகைய கடுமையான சட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றது.



குறிப்பாக, புதிய உத்தேச சட்டத்தின் கீழ் தலைமுடி நீளமாக வளர்த்திருந்தாலோ அல்லது உடலில் பச்சைக்குத்திக் (Tattoos) கொண்டிருந்தாலோ அவர்கள் உடனடியாகக் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற ரீதியில் திட்டமிட்ட முறையில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.

தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் சிறைத் தண்டனை : நீதியமைச்சர் விளக்கம் | Punishment For Growing Long Hair Getting A Tattoo

இத்தகைய ஆபத்தான மற்றும் அடிப்படையற்ற தகவல்களுக்கும் நாங்கள் கொண்டுவந்த சட்டத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

சட்டமூலத்தின் 4(2) ஆவது பிரிவின் கீழ், சர்வதேச ரீதியில் குற்றவியல் புலனாய்வாளர்களால் பயன்படுத்தப்படும் சில பொதுவான அளவுகோல்கள் (Rebuttable Presumptions) குறிப்பிடப்பட்டுள்ளது.




சர்வதேச அளவில் இயங்கும் பாரிய குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் தமக்கென பிரத்தியேகமான ஆடைகள், சைகைகள் அல்லது குறியீடுகளைப் பயன்படுத்துவது வழக்கம், இலங்கையிலும் எதிர்காலத்தில் அத்தகைய சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் அது நீதிமன்றத்தில் ஒரு காரணியாக மட்டுமே பரிசீலிக்கப்படுமே தவிர, அதுவே இறுதிச் சாட்சியமாகாது.



இத்தகைய நடைமுறைகள் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ள சர்வதேசத் தரத்திலான வரையறைகள் ஆகும்.



மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கோடு சில அரசியல் கட்சிகளும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களும் இந்தத் தவறான தகவல்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் சிறைத் தண்டனை : நீதியமைச்சர் விளக்கம் | Punishment For Growing Long Hair Getting A Tattoo 

குடிமக்களுக்குரிய அடிப்படை உரிமைகளான தாங்கள் விரும்பும் ஆடையை அணிவது, முடி அலங்காரங்களைச் செய்வது அல்லது பச்சைக்குத்திக் கொள்வது போன்ற தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு இந்தச் சட்டம் எவ்விதத்திலும் தடையாக இருக்காது.



மேலும், ஜனநாயக நாட்டில் எந்தவொரு சட்டத்தையும் விமர்சிப்பதற்கோ அல்லது உயர் நீதிமன்றத்தில் அதனைச் சவால் செய்வதற்கோ எவருக்கும் முழுமையான உரிமை உள்ளது.

மாற்று அரசியல் இலாபங்களுக்காகவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் பொய்களைப் பரப்பி மக்களைக் குழப்புவதை விடுத்து, பொருத்தமான ஜனநாயக வழிகளில் முறையிடுங்கள்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

காவலில் இருந்தபோது உயிரிழந்த நபரின் குடும்பத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் விசாரணைக்கு LFL கடும் கண்டனம் – Malaysiakini

Next Post

16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin