Last Updated:
ஈரான் அரசு அணு ஆயுதங்கள் பெறுவதை இணைந்து தடுப்போம் எனவும் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகுவை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்த நிலையில், அவருக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில், வரும் 23ஆம் தேதி இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், நெதன்யாகுவிற்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நெதன்யாகுவை சிறந்த போர் வீரர் எனப் புகழ்ந்துள்ளார். மேலும், நெதன்யாகுவை வலிமையானவர், தைரியமானவர் மற்றும் புத்திசாலி என்றும் அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் மக்கள் தவறான தலைவனை தேர்ந்தெடுத்தால், ஈரானுக்கு எதிரான பணிகளை அமெரிக்கா தனியாக செய்ய வேண்டியிருக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

