• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சபரிமலையில் துலாம் மாத பூஜைக்கான நடைத் திறப்பு! பஸ்கள் இல்லாததால் முதல் நாளே பக்தர்கள் சாலை மறியல்! | Sabarimala temple issue: Devottees protest over long waiting period of buses near Nilackal

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சபரிமலையில் துலாம் மாத பூஜைக்கான நடைத் திறப்பு! பஸ்கள் இல்லாததால் முதல் நாளே பக்தர்கள் சாலை மறியல்! | Sabarimala temple issue: Devottees protest over long waiting period of buses near Nilackal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vishnupriya R

Time
Published: Monday, October 19, 2026, 11:03 [IST]

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி/ துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் துலாம் மாத (ஐப்பசி மாத பிறப்பு) பூஜைக்காக நேற்றைய தினம் நடை திறக்கப்பட்டது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஐயப்பனை தரிசிக்க ஏராளமானோர் சபரிமலைக்கு வந்திருந்தனர்.

sabarimala iyyappan temple

நிலக்கல்- பம்பை வழித்தடத்தில் போதிய கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. அந்த பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியே பேருந்துகள் அதிகம் இயக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த பக்தர்கள் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

அது போல் கோயிலிலும் அதிக கூட்டம் வந்ததால் அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஏற்கெனவே கோயிலில் கூட்ட நெரிசலில் பெரும் அவதியுடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், பேருந்து கிடைக்காததால் மேலும் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் நிலக்கல்- பம்பை வழித்தடத்தில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் அட்டோடு வரை நீடித்தது.

இதனிடையே அவ்வழியில் ஏற்பட்ட ஒரு விபத்தால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பிய பக்தர்கள் போதிய பேருந்துகள் இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐப்பசி மாத பூஜையின் போது ஐயப்பனை தரிசிக்க முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் மூலம் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் தலா 60 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

இதனால் ஸ்பாட் புக்கிங் மூலமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. அடுத்த மாதம் வருடாந்திர மண்டல, மகரவிளக்கு சீசன் தொடங்குகிறது. இது 41 நாட்கள் இருக்கும்.

ஐப்பசி மாத தொடக்கத்திலேயே போக்குவரத்து பிரச்சினை, கூட்டத்தை கட்டுப்படுத்தாது உள்ளிட்டவைகளால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில் மகரவிளக்கு சீசன் எப்படி இருக்குமோ என்ற கவலை பக்தர்களுக்கு தொற்றிக் கொண்டது.

மேலும் நிலக்கல்- பம்பை இடையே சாலை சீரமைப்பு பணிகளையும் விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ள வருடாந்திர சீசனும் பெரும் குழப்பத்திலேயே முடியும் என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது துலாம் பூஜைக்காக திறக்கப்பட்ட நடை அக்டோபர் 22 ஆம் தேதி வரை இருக்கும். அதன் பிறகு நடை அடைக்கப்பட்டு மகரவிளக்கு சீசனுக்காக நவம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

English summary

Sabarimala Iyappan temple issue: Devottees are affected for lack of buses ply from Nilackal to Pampa during first day of Ippasi season.

Read More

Previous Post

பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Next Post

நம்ம ரன் கோயம்புத்தூர்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… யார் எதில் கலந்து பங்கேற்கலாம்? | Namma Run Coimbatore 2026 | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Next Post
நம்ம ரன் கோயம்புத்தூர்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… யார் எதில் கலந்து பங்கேற்கலாம்? | Namma Run Coimbatore 2026 | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

நம்ம ரன் கோயம்புத்தூர்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... யார் எதில் கலந்து பங்கேற்கலாம்? | Namma Run Coimbatore 2026 | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin