• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது! | France Protests Turn Violent: Over 1,200 Arrested as Shops and Historic Buildings Are Set Ablaze

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது! | France Protests Turn Violent: Over 1,200 Arrested as Shops and Historic Buildings Are Set Ablaze
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Sunday, October 18, 2026, 9:26 [IST]

பாரிஸ்: சமீப காலங்களாகவே உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இலங்கை, வங்கதேசம் தொடங்கி நாம் பல நாடுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதற்கிடையே பிரான்ஸ் நாட்டிலும் இப்போது மிக பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் வரலாற்று கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதோடு, பல இடங்களில் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் அரசின் பொதுச் சேவைகள் மீதான அதிருப்தி காரணமாக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறின. பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

France Protests france

சூறையாடல்

இதில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 5.5 லட்சம் பேர் போராட்டங்களில் பங்கேற்றதாகவும் தலைநகர் பாரிஸில் மட்டும் 1.1 லட்சம் பேர் திரண்டதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.

முதலில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசின் பொருளாதார கொள்கைகளால் அதிருப்தியடைந்த மக்களின் இயக்கமாக விரிவடைந்தது.

தீவைப்பு

பாரிஸில் பிற்பகலில் அமைதியாக நடைபெற்ற பேரணி, மாலையில் வன்முறையாக மாறியது. குடியரசு சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீரை பீரங்கிகளையும் பயன்படுத்தினர். கடைகள் சூறையாடப்பட்டதுடன், சில வணிக நிறுவனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

போராட்டத்தின் தாக்கம் பாரிஸுடன் முடிந்துவிடவில்லை. போர்டோ, லில்லி போன்ற நகரங்களிலும் வன்முறை ஏற்பட்டன. அங்குள்ள பல கடைகள் சூறையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அங்குள்ள கட்டிடங்களுக்குள்ளும் சிலர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. லியோன் நகரில் நகரின் அடையாளமாக இருந்த சுற்றுலா அலுவலகம் அமைந்திருந்த வரலாற்று கட்டிடத்தில் தீப்பிடித்தது எரிந்து நாசானது. கிரெனோபிள், அவின்யோன், பாவ், மான்ட்பெலியர், வலான்ஸ் உள்ளிட்ட நகரங்களிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது.

கண்டனம்

போராட்டங்களுக்கு எப்போதும் அனுமதி இருக்கிறது என்றாலும் இது போன்ற வன்முறை சம்பவங்களை ஏற்கவே முடியாது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். தீவைப்பு, கடைகள் சூறையாடல் மற்றும் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

போலீசார் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறிய பிரதமர் லெகோர்னு, அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் குழப்பத்தை ஏற்படுத்தவே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் தேர்தல்

ஐரோப்பாவில் மிக முக்கிய நாடாக பிரான்ஸ் இருக்கிறது. அங்கு 2027 ஏப்ரலில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மேக்ரான் அடுத்த ஆண்டு பதவியிலிருந்து விலக உள்ள நிலையில், தேசிய பேரணி கட்சி தலைவர் மரின் லெ பென் மற்றும் இடதுசாரி தலைவர் ஜீன்-லுக் மெலன்சோன் உள்ளிட்டோர் களத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த வன்முறை வெடித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

English summary

Protests over rising living costs, fuel prices and dissatisfaction with public services have turned violent across France(பிரான்ஸ் நாட்டில் வெடித்த வன்முறை): France Protests latest news in tamil.

Read More

Previous Post

பறக்கும் வசதியுடைய புதிய ‘ரோட்ஸ்டர்’ காரை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்: 2028 இல் உற்பத்தி ஆரம்பம் – Sri Lanka Tamil News

Next Post

டொனால்ட் ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடும் ஐரோப்பாவின் பாதுகாப்பு நெருக்கடியும் – Sri Lanka Tamil News

Next Post
டொனால்ட் ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடும் ஐரோப்பாவின் பாதுகாப்பு நெருக்கடியும் – Sri Lanka Tamil News

டொனால்ட் ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடும் ஐரோப்பாவின் பாதுகாப்பு நெருக்கடியும் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin