• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பறக்கும் வசதியுடைய புதிய ‘ரோட்ஸ்டர்’ காரை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்: 2028 இல் உற்பத்தி ஆரம்பம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பறக்கும் வசதியுடைய புதிய ‘ரோட்ஸ்டர்’ காரை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்: 2028 இல் உற்பத்தி ஆரம்பம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
தொழில்நுட்பம் & அறிவியல்
/
பறக்கும் வசதியுடைய புதிய ‘ரோட்ஸ்டர்’ காரை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்: 2028 இல் உற்பத்தி ஆரம்பம்

பறக்கும் தொழில்நுட்ப வசதியைக் கொண்ட புதிய ரோட்ஸ்டர் ரக விளையாட்டுக்காரை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த கார் 2028 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு வரும் என டெஸ்லா அறிவித்துள்ளது.


விஞ்ஞான புனைகதைகளில் மாத்திரம் காணப்பட்ட பறக்கும் தொழில்நுட்ப வசதியைக் கொண்ட புதிய ‘ரோட்ஸ்டர்’ (Roadster) ரக மின்சார விளையாட்டுக்காரை (Sports Car) டெஸ்லா நிறுவனத்தின் தலைமை  அதிகாரி எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சோதனை தளத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போதே இந்த புதிய வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது.

இருவர் பயணிக்கக்கூடிய இந்த புதிய ரோட்ஸ்டர் கார், ஒரு வினாடிக்கும் குறைவான சாதனைக் காலத்தில் பூச்சியத்திலிருந்து மணிக்கு 60 மைல் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காரின் அடிப்பகுதியிலுள்ள உறிஞ்சுதல் (suction) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செங்குத்தான சரிவில் ஏறி, தலைகீழாக நின்று சுழன்று, காற்றில் பாய்ந்து, விசேட காற்றுப் பீச்சிகள் (air jets) மூலம் தரையிறங்கும் சாகசத்தையும் அது நிகழ்த்திக்காட்டியுள்ளது. 

எவருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த நேரடி செயல்விளக்கத்தின் போது காருக்குள் சாரதி எவரும் அமர்த்தப்படவில்லை எனவும், பாதுகாப்பு கருதி தொலைவில் இருந்து இது இயக்கப்பட்டதாகவும் எலான் மஸ்க் பார்வையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இடம்பெற்ற செயல்விளக்கத்தில், வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லாவின் ஏனைய கார் மாடல்களுக்கு மேலாக குறித்த கார் காற்றில் பாய்ந்து கடந்ததுடன், அதன் பின்புறத்திலுள்ள ஜெட் தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேகமாகப் பயணித்துக் காட்டியது. 

இந்த காரானது தரையிலும் வானிலும் இயங்குவதற்கு ஏதுவாக 10 உந்துவிசை முனைகளையும் (nozzles) மீஉயர் அழுத்தக் காற்றுத் தொட்டிகளையும் (ultra high-pressure air tanks) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த கார் நிறுவனமும் மிகச்சிறந்த ரொக்கெட் நிறுவனமும் இணைந்து பணியாற்றியதன் விளைவாகவே இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமாகியுள்ளதாகவும், இக்கார் 2028 ஆம் ஆண்டில் முழுமையான உற்பத்தியை எட்டும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த செயல்விளக்க நிகழ்வு வெற்றிகரமாக அமைந்திருந்த போதிலும், இக்கார் நீண்ட தூரத்திற்கு உண்மையிலேயே சீராகப் பறக்கும் ஆற்றலைக் கொண்டிருக்குமா அல்லது குறுகிய பாய்ச்சல்களை மாத்திரமே மேற்கொள்ளுமா என்பது தொடர்பில் விமானப் போக்குவரத்து மற்றும் வாகனத் துறை நிபுணர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. 

நிலத்தில் ஓடும் வாகனங்களுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்களும், வானில் பறக்கும் விமானங்களுக்குத் தேவையான குறைந்த எடை அமைப்பும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதால், இத்தகைய கலப்பு வாகனங்கள் வீதிகளிலும் வான்வெளியிலும் முழுமையான செயல்திறனை வெளிப்படுத்துவது பெரும் பொறியியல் சவாலாகும் என துறைசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More

Previous Post

DECODE | ஈரான் மீதான தாக்குதலுக்கு டிரம்ப் வைத்திருக்கும் ஷாக் திட்டம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!

Next Post

இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது! | France Protests Turn Violent: Over 1,200 Arrested as Shops and Historic Buildings Are Set Ablaze

Next Post
இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது! | France Protests Turn Violent: Over 1,200 Arrested as Shops and Historic Buildings Are Set Ablaze

இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது! | France Protests Turn Violent: Over 1,200 Arrested as Shops and Historic Buildings Are Set Ablaze

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin