• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விழுப்புரம் கோலியனூர் வட்டாரத்தில் அமோகமாக நடக்கும் கேந்தி மலர் அறுவடை… தசரா விற்பனையை எதிர்நோக்கும் விவசாயிகள்..! | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
விழுப்புரம் கோலியனூர் வட்டாரத்தில் அமோகமாக நடக்கும் கேந்தி மலர் அறுவடை… தசரா விற்பனையை எதிர்நோக்கும் விவசாயிகள்..! | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 17, 2026 6:15 PM IST

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டாரத்தில் தசரா மற்றும் ஆயுதப் பூசையை முன்னிட்டு கேந்தி மலர் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

+

விழுப்புரம்

விழுப்புரம் கோலியனூர் வட்டாரத்தில் அமோகமாக நடக்கும் கேந்தி மலர் அறுவடை… தசரா விற்பனையை எதிர்நோக்கும் விவசாயிகள்..!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டாரத்தில் தசரா மற்றும் ஆயுதப் பூசையை முன்னிட்டு கேந்தி மலர் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் மலர்களை உள்ளூர் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட சித்தாத்தூர், திருக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 3 ஹெக்டர் பரப்பளவில் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ண கேந்தி (சாமந்தி) மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு தற்போது இப்பகுதிகளில் மலர் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மலர் சாகுபடி குறித்து விவசாயி வினோத் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10,000 முதல் 11,000 செடிகள் வரை தேவைப்படுகிறது. போக்குவரத்துச் செலவு உட்பட ஒரு செடியின் விலை ரூ.2 முதல் ரூ.2.50 வரை கொடுத்து வாங்கி வருகிறோம். வயலைத் தகுந்த முறையில் தயார் செய்து, முறையாகப் பராமரித்து தற்போது பூக்களை அறுவடை செய்து வருகிறோம்.

ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.80,000 வரை செலவாகிறது. இது ஒரு குறுகிய கால 3 மாதப் பயிராகும். முறையாகப் பராமரித்தால், ஒரு ஏக்கரில் இருந்து சுமார் 500 கிலோ வரை பூக்களை அறுவடை செய்ய முடியும் என்றார்.

இங்கு அறுவடை செய்யப்படும் பூக்கள் விழுப்புரம் உள்ளூர் சந்தைகளுக்கும், திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மலர் சந்தைகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது விழுப்புரத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பூக்களின் விலை சற்று சரிவு கண்டுள்ளது.

மேலும், தொடர் மழையால் பூக்களில் வெற்றிிலை கார் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதும் விலை குறைய ஒரு காரணமாகும். இருப்பினும், வரும் நாட்களில் மழை நின்று இயல்பு நிலை திரும்பினால், ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

கூடுதல் விறு விறுப்படையும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்.. மழையால் போட்டி 9 ஓவர்களாக குறைப்பு | கிரிக்கெட் செய்திகள்

Next Post

பள்ளி மாணவிகளின் ஆபாசப் படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கியதாக, படிவம் 5 மாணவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். – Malaysiakini

Next Post

பள்ளி மாணவிகளின் ஆபாசப் படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கியதாக, படிவம் 5 மாணவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin