‘நம்ம ரன் கோயம்புத்தூர்’ வெறும் ஓட்டப் போட்டி மட்டுமல்ல; உடல் ஆரோக்கியம், மன உறுதி, சமூக ஒற்றுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் மிகச்சிறந்த வாய்ப்பு. அப்படியான இதில் கலந்து கொள்வதன் மூலம், நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். குறிப்பாக நீண்டதூரம் ஓடுவதென்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் வலிமையை அதிகரிக்கவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் உதவுகிறது. தொடர்ந்து ஓடுவதன் மூலம் உடலின் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கலாம். அத்துடன், அத்துடன் அன்றாட வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட இதுபோன்ற ரன்னிங், வாக்கத்தான், மாரத்தான் போன்றவை சிறந்த வழிகளாக இருக்கும். அதுவும் இயற்கையான சூழலில் உங்களை போன்ற பலருடனும் இணைந்து ஓடுவது, மனதிற்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
‘இதுபோன்ற ஓட்டம், நன்கு பயிற்சி பெற்றவர்களுக்குத்தான் பொருந்தும்’ என நினைக்க வேண்டாம். நீங்கள் முதல் முறையாக ஓடுபவராக இருந்தாலும் சரி, அல்லது ஏற்கெனவே ஓட்டப் பயிற்சி செய்பவராக இருந்தாலும் சரி, உங்களுக்கான இலக்கை நிர்ணயித்து அதை அடைந்தால் போதுமானது. உங்களுக்கு நீங்களே இலக்கு நிர்ணயித்து, அதை அடைவதென்பது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இது உங்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கும்.
இலக்கே இல்லையென்றாலும், எவ்வளவு தூரம் உங்களால் ஓட முடியும் என்பதை முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் வேகமாக ஓட வேண்டும் என்பது மட்டுமே இலக்கல்ல; உங்கள் திறனுக்கு ஏற்ப பங்கேற்று, தொடங்கிய இலக்கை நிறைவு செய்வதும் ஒரு பெரிய சாதனைதான்.
நீங்கள் ஓடும்போது உங்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் இணைந்து பங்கேற்பதன் மூலம், கூடுதல் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறலாம். நம்ம ரன் நிகழ்ச்சி, வெறும் ஓட்டப்பந்தயமாக இல்லாமல் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும், அதேநேரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனைவரும் ஒன்றாகப் பின்பற்ற ஓர் ஊக்கமாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மட்டுமன்றி, நிகழ்ச்சிக்கு வரும் புதிய மனிதர்களையும் உங்களால் சந்திக்க முடியும். இது உங்கள் நட்புவட்டத்தை மேம்படுத்தும்.
அனுபவம் வாய்ந்த ஓட்டப்பந்தய வீரர்கள், மாரத்தான் வீரர்களுக்கும், இந்த நம்ம ரன் கோயம்புத்தூர் சிறந்த வாய்ப்பு. ஏனெனில் இதில் வெற்றிபெறுவதன் மூலம் ரூ. 3 லட்சம் வரை உங்களால் வெல்ல முடியும்.
மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கும், அனைத்து வயதினருக்கும் இந்த நம்ம ரன் கோயம்புத்தூர் 2026, ஓட்டத்தைத் தாண்டிய ஓர் அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். உங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தன்னம்பிக்கைக்காகவும், புதிய அனுபவத்திற்காகவும் இந்த ஓட்ட நிகழ்வில் பங்கேற்றிடுங்கள். நீங்கள் அனுபவம் வாய்ந்த ஓட்டப்பந்தய வீரராக இருந்தாலும் சரி, முதல் முறையாக ஓடத் தொடங்குபவராக இருந்தாலும் சரி, உங்களுக்குப் பொருத்தமான பிரிவைத் தேர்ந்தெடுத்து இந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகுங்கள்!
நெட்வொர்க்18 –ன் ‘நம்ம ரன் 2026’ (Network18 – Namma Run 2026) நிகழ்வில் நீங்களும் ஒருவராகப் பங்கேற்று பயன்பெறுங்கள். அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்!

