ஈரானுடன் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முன்பைவிட அதிகளவில் தயாராக இருப்பதாக அந்நாட்டின் மத்திய தேசிய பாதுகாப்பு, மற்றும் வெளியுறவுக் குழுத் தலைவர் அலி ரஷீத் அல் நுஐமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
”நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களையும் நாட்டையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
ஈரான் நடத்திய புதிய தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய புதிய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களும் பதற்றத்தை மீண்டும் அதிகரித்தன.

போரின் உச்சக்கட்டத்தில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பாரசீக வளைகுடா நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல்களை நடத்தப்பட்டது.
எரிசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள போதிலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் முன்னுரிமை அளிக்கும்.
இதன்படி நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, UAE மேலும் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

