Last Updated:
அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் துஷ்யந்த் கௌதம் சிக்கிம் ஆளுநராகப் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அங்கிதா பண்டாரி வழக்கில், விசாரணை முடியும் வரை துஷ்யந்த் கௌதம் சிக்கிம் ஆளுநராகப் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தவர் அங்கிதா பண்டாரி. இவர் 2022ஆம் ஆண்டு ஒரு கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது கொலை வழக்கைத் தற்போது சிபிஐ விசாரித்துவருகிறது. அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் தற்போதைய சிக்கிம் ஆளுநர் துஷ்யந்த் கவுதமுக்கும் தொடர்பு இருக்கிறது என அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்தப் பின்னணியில் தற்போது அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று, “அங்கிதா பண்டாரி வழக்கில் விசாரணை முடியும் வரை துஷ்யந்த் கௌதம் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
राष्ट्रपति महोदया,
19 साल की अंकिता भंडारी ने एक VIP के लिए अपनी गरिमा से समझौता करने से इनकार किया, जिसके कारण उसकी हत्या कर दी गई। चार साल बाद भी CBI की धीमी जांच के चलते यह सवाल बना हुआ है कि वो VIP कौन था।अंकिता के परिवार समेत कई लोग मानते हैं कि दुष्यंत गौतम इस मामले से जुड़े हुए हैं। ऐसे में उनकी सिक्किम के राज्यपाल के पद पर नियुक्ति से मैं स्तब्ध हूं। राज्यपाल के पद पर रहते हुए उनके खिलाफ कोई आपराधिक कार्यवाही नहीं हो सकती।
दुष्यंत गौतम की नियुक्ति की सलाह देकर प्रधानमंत्री मोदी ने साबित किया है कि महिलाओं की सुरक्षा की उन्हें बिल्कुल परवाह ही नहीं है।
मैं आपसे अपील करता हूं कि सरकार को इस नियुक्ति पर पुनर्विचार करने और जांच पूरी होने तक दुष्यंत गौतम को पदभार न देने की सलाह दें।
अंकिता के माता-पिता की न्याय की उम्मीद मत टूटने दीजिए।
— Rahul Gandhi (@RahulGandhi) October 15, 2026
இந்தக் கடிதம் தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் அவர்களே, 19 வயதான அங்கிதா பண்டாரி, ஒரு முக்கியப் பிரமுகருக்காக (VIP) தனது கண்ணியத்தை விட்டுக்கொடுக்க மறுத்ததன் விளைவாகக் கொல்லப்பட்டார். நான்கு ஆண்டுகள் கடந்தும், சிபிஐ-யின் மந்தமான விசாரணையால், அந்த முக்கியப் பிரமுகர் யார் என்ற கேள்வி இன்னும் விடைபெறாமலேயே உள்ளது.
அங்கிதாவின் குடும்பத்தினர் உட்பட பலர், துஷ்யந்த் கௌதமிற்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக நம்புகின்றனர். இத்தகைய சூழலில், அவர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆளுநராகப் பதவியில் இருக்கும்போது, அவர் மீது எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது.
துஷ்யந்த் கௌதமை ஆளுநராக நியமிக்கப் பரிந்துரைத்ததன் மூலம், பெண்களுக்கு எதிரான பாதுகாப்பில் தனக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதைப் பிரதமர் மோடி நிரூபித்துள்ளார். இந்த நியமனம் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்துமாறும், விசாரணை முடியும் வரை துஷ்யந்த் கௌதம் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்துமாறும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அங்கிதாவின் பெற்றோரின் நீதிக்கான நம்பிக்கையைச் சிதைக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


