• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரத்தன் டாடா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? வெடிக்கும் போட்டி.. நீதிமன்றத்தை நாடிய நோயல் டாடா | Tata Trusts issue continuous: Noel Tata and Son Neville File Caveat Petitions in Bombay High Court

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரத்தன் டாடா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? வெடிக்கும் போட்டி.. நீதிமன்றத்தை நாடிய நோயல் டாடா | Tata Trusts issue continuous: Noel Tata and Son Neville File Caveat Petitions in Bombay High Court
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Vigneshkumar

Time
Updated: Wednesday, October 14, 2026, 12:51 [IST]

மும்பை: டாடா அறக்கட்டளையின் நிர்வாகம் தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தலைவர் நோயல் டாடாவும் அவரது மகன் நெவில் டாடாவும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளனர். இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தில் ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு இப்போது பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. டாடா அறக்கட்டளையின் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக அதன் அறங்காவலர்களான வேணு ஸ்ரீனிவாசன், விஜய் சிங் ஆகியோர் சமீபத்தில் மகாராஷ்டிரா அறக்கட்டளை ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர்.

Tata Trusts issue ratan tata Noel Tata

டாடா

இதற்கிடையே நோயல் டாடா மற்றும் அவரது மகன் நெவில் டாடா ஆகியோர் அக்டோபர் 7ம் தேதி மும்பை சிவில் நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்தனர். தற்போது மும்பை உயர் நீதிமன்றத்திலும் இதேபோல கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களில் அறங்காவலர்களான வேணு ஸ்ரீனிவாசன், விஜய் சிங், டேரியஸ் கம்பட்டா, பாஸ்கர் பட் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கம்பட்டா, பட் ஆகியோரின் பெயர்கள் நடைமுறை காரணங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக டாடா அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேவியட் மனு என்பது ஒரு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு, மனு தாக்கல் செய்தவரின் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்பதாகும். அதாவது டாடா வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என சொல்லி நோயல் டாடா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

விசாரணை

வேணு ஸ்ரீனிவாசன், விஜய் சிங் ஆகியோர் அளித்த புகாருக்கு பதிலளிக்க டாடா அறக்கட்டளைக்கு அக்டோபர் 19ம் தேதி வரை அவகாசம் அளித்து மகாராஷ்டிரா அறக்கட்டளை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.. சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் நிர்வாகம் தொடர்பாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்துடனான சில பரிவர்த்தனைகளில், ஒரு தொண்டு அறக்கட்டளை தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் இறுதியில், அறக்கட்டளையின் நிர்வாகம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் விசாரணை முடியும் வரை அறக்கட்டளையின் நிர்வாக குழுவில் மாற்றங்கள் செய்யப்படுவதையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வேணு ஸ்ரீனிவாசன் கோரியிருந்தார்.

வேணு ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விகள்

கடந்த செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தீர்மானம் எண் 107 தான் இந்த புகாரின் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த தீர்மானம் என்பது தனது முடிவெடுக்கும் உரிமையையும் வாக்களிக்கும் உரிமையையும் தடுக்கும் முயற்சி என்று ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டாடா சன்ஸ் இயக்குநர் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் அறக்கட்டளைக்குள் உள்ள ஒரு சிறிய குழுவிடம் குவிக்க முயற்சி நடப்பதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். கடந்த 2025 நவம்பரில் தன்னை ஒதுக்கியதையும் இந்த விவகாரத்துடன் அவர் தொடர்புப்படுத்தியுள்ளார். இந்த புகார்கள் மீது விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

பின்னணி

டாடா அறக்கட்டளை நிர்வாக மோதலுக்கு பின்னால், டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தொடர்பான விவகாரம் தான் பிரதானமாக உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா அறக்கட்டளைக்கு சுமார் 66 சதவீதப் பங்குகள் உள்ளன. ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் சுமார் 18.37 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகள் டாடா குழும நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் உள்ளன.

டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டுமா என்பதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது. ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் பங்குச்சந்தை பட்டியலிட வேண்டும் என சொல்கிறது. ஆனால், நோயல் டாடா பங்குகளை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், டாடா அறக்கட்டளையின் நிர்வாகம் தொடர்பான புகாரும் நீதிமன்றம் மற்றும் அறக்கட்டளை ஆணையர் வரை சென்றுள்ளது. புகாரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த முடிவுகளும் முக்கியத்துவம் பெறும்.

English summary

Tata Trusts chairman Noel Tata and his son Neville Tata have filed caveat petitions in the Bombay High Court(பெரிதாக வெடிக்கும் டாடா டிரஸ்ட் விவகாரம்): Tata Trusts issue latest news in tamil.

Read More

Previous Post

ரியாத், தம்மாம் விமான சேவைகளை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Next Post

Gold: அந்தர் பல்டி அடித்த மக்கள்.. 22 கேரட் வேண்டாம், 18 கேரட் தான் வேணும்..!! | No More 22K Only dominance – Why Indian Gold Buyers Are Rapidly Shifting to 18-Karat and Lightweight Jewellery

Next Post
Gold: அந்தர் பல்டி அடித்த மக்கள்.. 22 கேரட் வேண்டாம், 18 கேரட் தான் வேணும்..!! | No More 22K Only dominance – Why Indian Gold Buyers Are Rapidly Shifting to 18-Karat and Lightweight Jewellery

Gold: அந்தர் பல்டி அடித்த மக்கள்.. 22 கேரட் வேண்டாம், 18 கேரட் தான் வேணும்..!! | No More 22K Only dominance - Why Indian Gold Buyers Are Rapidly Shifting to 18-Karat and Lightweight Jewellery

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin