பொலன்னறுவையில் தீ விபத்தில் சிக்கி இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமன்கடுவை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் சேகரிப்பட்டுக் கிடந்த கழிவுப்பொருள்களைப் பெற்றோல் ஊற்றி எரித்து
அழிக்க முற்பட்ட போதே எதிர்பாராதவிதமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவியதில் சம்பவ இடத்திலேயே அந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் யுவதியின் பெற்றோர் சிறிய தீக்காயங்களுடன் உயிர்
தப்பியுள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

