தேசிய சமூக உதவித் திட்டம் என்பது நாட்டின் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், 1995ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இது, மத்திய நிதியுதவித் திட்டமாகும். மாநில அரசுகளின் பங்களிப்புடனும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS), விதவை ஓய்வூதியத் திட்டம் (IGNWPS), மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் (IGNDPS), தேசிய குடும்ப நலத் திட்டம் (NFBS) மற்றும் அன்னபூர்ணா திட்டம் உள்ளிட்ட முக்கிய அங்கங்களைக் கொண்டு செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) முறையில் செலுத்தப்படுகிறது. தற்போது, இத்திட்டம் மற்றும் அதன் துணைத் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


