• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.100 கோடி சொத்து.. 26 ஆண்டுகள் நீடித்த மர்மம்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்.. விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரூ.100 கோடி சொத்து.. 26 ஆண்டுகள் நீடித்த மர்மம்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்.. விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கூடத்தில் குடும்பத்துக்குச் சொந்தமாகத் திருவனந்தபுரத்திலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பூர்வீக நிலங்களும் கட்டடங்களும் இருந்தன. சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களின் பரப்பளவு 6 ஏக்கருக்கும் அதிகம் என்றும், சில அறிக்கைகளில் 18 ஏக்கர் வரை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991 முதல் 2017 வரையிலான 26 ஆண்டுகளில், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

குடும்பத் தலைவர் கோபிநாதன் நாயர், அவரது மனைவி சுமுகி அம்மா, மகள் ஜெயஸ்ரீ, மகன் ஜெயபாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், ஜெயமாதவன் நாயர், உண்ணிகிருஷ்ணன் நாயர் என மரணங்கள் அடுத்தடுத்து தொடர்ந்தன. கடைசி வாரிசான ஜெயமாதவன் நாயரின் மரணத்துக்குப் பிறகு, குடும்பத்தின் சொத்துக்கள் கைமாறிய விதம்தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. குடும்பத்தின் காரியஸ்தராக இருந்த ரவீந்திரன் நாயர், ஜெயமாதவன் நாயரின் சொத்துக்களை உயில் மூலம் பெற்றதாகக் கூறப்பட்டது.

இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய Blue Drum வழக்கு! கணவனை கொன்ற மனைவிக்கும் ஆண் நண்பருக்கும் தூக்கு தண்டனை

ஆனால், அந்த உயிலில் இடம்பெற்றிருந்த கையெழுத்து ஜெயமாதவன் நாயருடையது அல்ல என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில், உயிலில் இருந்த கையெழுத்து போலியானது எனத் தெரியவந்தது. ஜெயமாதவன் நாயரின் சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள, போலி உயில் தயாரிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்தது. இதற்கிடையே, 2017 ஏப்ரல் 2-ஆம் தேதி ஜெயமாதவன் நாயர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

ஜெயமாதவன் நாயர் கட்டிலிலிருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக ரவீந்திரன் நாயர் கூறி நம்ப வைத்திருந்தார். ஜெயமாதவன் நாயரை ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக ரவீந்திரன் கூறியிருந்தார். ஆனால், இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் சுமேஷின் வாக்குமூலம் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. தன்னிடம் பொய்ச் சாட்சி அளிக்கும்படி ரவீந்திரன் கேட்டதாகவும், அதற்காக 5 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியதாகவும் சுமேஷ் பின்னர் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

விசாரணையின் அடுத்தகட்டத்தில், வீட்டில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தின. கட்டில் உள்ளிட்ட பகுதிகளிலும், வீட்டின் பின்புறத்தில் கிடைத்த மரக்கட்டையிலும் ரத்தக்கறைகள் கண்டறியப்பட்டன. அந்த ரத்தம் மனித ரத்தம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஜெயமாதவன் நாயரின் உறவினர் ஒருவரின் ரத்த மாதிரியுடன் ஒப்பிட்டுப் பரிசோதிக்கப்பட்டது. இதன் மூலம், ரத்தக்கறைகள் ஜெயமாதவன் நாயருடையவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், உடற்கூராய்வு மற்றும் உள் உறுப்புகள் பரிசோதனை அறிக்கைகளின்படி, தலையில் ஏற்பட்ட காயமே மரணத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது. மரணத்துக்கு முன்பு அவர் மூச்சுத்திணறலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. ஆனால், கட்டிலிலிருந்து தவறி விழுந்ததால் இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இன்னும் அறிவியல் ரீதியான விளக்கம் தேவைப்பட்டது. இதற்காக, கோழிக்கோடு தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தடயவியல் பயோமெக்கானிக்ஸ் நிபுணர்களின் உதவி நாடப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அவர் கீழே விழுந்ததால் அந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனத் தெள்ளத் தெளிவாகத் தெரியவந்தது. இதற்கிடையே, கடந்த 2025ஆம் ஆண்டு காரியஸ்தர் ரவீந்திரன் நாயரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், Brain Electrical Oscillation Signature Profiling சோதனை பெங்களூருவில் வைத்து நடத்தப்பட்டது. சோதனையில், ரவீந்திரன் நாயர் அளித்த வாக்குமூலங்கள் பொய்யானவை என்ற முடிவுகள் கிடைத்துள்ளன.

இந்த வழக்கில் மற்றொரு முக்கியத் தடயம், ஜெயமாதவன் நாயரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட கார் 2019-ஆம் ஆண்டில் விற்கப்பட்டிருந்தது. பின்னர், அதைத் தேடிக் கண்டுபிடித்து ஆய்வு செய்தபோது, காரின் பின்புறப் பகுதியில் இருந்த தரை விரிப்பின் அடியில் ரத்தக்கறைகள் கண்டறியப்பட்டது. அந்தக் காரை ரவீந்திரனின் நண்பரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான அனில் பயன்படுத்தியதாகவும், சாஜு அந்தக் காரை ஓட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே, ஜெயமாதவன் நாயர் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றது. அவர் திருமணம் செய்துகொண்டால் புதிய சட்டப்பூர்வ வாரிசு உருவாகி, சொத்துக்கள் தன் கையைவிட்டுப் போய்விடும் என ரவீந்திரன் நாயர் அஞ்சியதாக போலீசார் தெரிவித்தனர். திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ரவீந்திரன் ஜெயமாதவன் நாயரின் தலையைச் சுவரிலும் மரக்கட்டில் பகுதியிலும் பலமாக மோதச் செய்து, பின்னர் மூச்சுத்திணறடித்துக் கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜெயமாதவன் நாயர் கொலை வழக்கில் முன்னாள் காரியஸ்தர் ரவீந்திரன் நாயரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அக்டோபர் 13-ஆம் தேதி கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கில் இன்னும் சில கேள்விகள் விடை தெரியாமல் உள்ளன. “கூடத்தில் குடும்பத்தைச்” சேர்ந்த மற்ற ஆறு பேரின் மரணங்களுக்கும் இதே நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் ”கூடத்தில் குடும்பத்தின்” மற்ற மரணங்களுக்குப் பின்னாலும் இதே சதித்திட்டம் இருந்ததா? என்பதை இனிமேல் நடைபெறும் விசாரணைதான் தெளிவுபடுத்த வேண்டும்.

Read More

Previous Post

கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான்

Next Post

மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தில் திடீர் மாற்றம்! – யாருக்கெல்லாம் இனி அதிக நன்மைகள் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தில் திடீர் மாற்றம்! – யாருக்கெல்லாம் இனி அதிக நன்மைகள் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தில் திடீர் மாற்றம்! - யாருக்கெல்லாம் இனி அதிக நன்மைகள் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin