• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பௌத்த துறவி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிவதற்கு முழு அனுமதி உண்டு என்றும், குறித்த நிக்காயவினால் (பௌத்த பிரிவினால்) அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவிக்கும் வரை அந்த உரிமை நீடிக்கும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை குறித்து ஊடகங்களுக்கு விசேட உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இடைக்கால விதப்புரை




அத்துடன், சிறைச்சாலைச் சட்டங்கள் புதுப்பித்தல் குழுவின் பரிந்துரைகளின்படி நிலையான கட்டளை ‘356’ இற்குப் பதிலாக 356 (அ) எனத் திருத்தமொன்றும் 550 திணைக்களக் கட்டளைத் திருத்தத்திற்கு இடைக்கால விதப்புரையொன்றும் குறித்த குழுவினால் முன்மொழியப்பட்டுள்ளது.

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Buddhist Monks In Prison





குறித்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சிறைச்சாலை நிலையான கட்டளைகளைத் திருத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





“சிறைச்சாலை நிலையான கட்டளை 356 திருத்தப்பட்டு 356 ‘அ’ என ஒரு பகுதியும், 550 திணைக்களக் கட்டளையைத் திருத்துவதற்காக இடைக்கால விதப்புரையொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

பௌத்த துறவியின் காவியுடையை களைய வழங்கப்பட்ட அவகாசம்




அதற்கமைய, பௌத்த துறவி ஒருவர் கைதியாகச் சிறையிலடைக்கப்படும் போது, அக்கைதி அதுவரை அணிந்திருந்த தனது கைதி ஆடையை அகற்றுவது தொடர்பில் பௌத்த அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவித்து நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Buddhist Monks In Prison




வேறு மதத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர் கைதியானால், இந்த ஏற்பாடுகள் அதற்குப் பொருத்தமான வகையில் மாற்றியமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்.



அத்துடன், நிலையான கட்டளை 550 இல் புதிதாக ஒரு பகுதி சேர்க்கப்பட்டுத் திருத்தம் வருகிறது.

சிறையிலிருந்து  அழைத்துவரும்போது காவியுடை அணிய அனுமதி





அதன்படி, பௌத்த துறவி ஒருவர் கைதியாகச் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டால், அத்தகைய சந்தர்ப்பத்தில் காவி உடை அணிந்திருப்பதற்கு முழுமையான அனுமதி வழங்கப்படுகிறது.

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Buddhist Monks In Prison





தேரர் சார்ந்த நிக்காயவிலிருந்து அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவித்தல் கிடைக்கும் வரை அந்த அனுமதி தொடர்ந்து இருக்கும்.



இது தொடர்பான இடைக்காலக் குழு அறிக்கையும் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்குக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

 புகைமூட்ட நெருக்கடி – அரசாங்கம் என்னதான் செய்கிறது? – Malaysiakini

Next Post

நாட்டையே உலுக்கிய Blue Drum வழக்கு! கணவனைக் கொன்ற மனைவிக்கும் ஆண் நண்பருக்கும் என்ன தண்டனை தெரியுமா? | Blue Drum case | India News (இந்தியா செய்திகள்)

Next Post
நாட்டையே உலுக்கிய Blue Drum வழக்கு! கணவனைக் கொன்ற மனைவிக்கும் ஆண் நண்பருக்கும் என்ன தண்டனை தெரியுமா? | Blue Drum case | India News (இந்தியா செய்திகள்)

நாட்டையே உலுக்கிய Blue Drum வழக்கு! கணவனைக் கொன்ற மனைவிக்கும் ஆண் நண்பருக்கும் என்ன தண்டனை தெரியுமா? | Blue Drum case | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin