• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை..!! | Gold Price Falls for Second Straight Day in Tamil Nadu: 22K Gold at Rs 13,685 per Gram, Savaran at Rs 1,09,480

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை..!! | Gold Price Falls for Second Straight Day in Tamil Nadu: 22K Gold at Rs 13,685 per Gram, Savaran at Rs 1,09,480
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை..!!

தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைந்துள்ளது. ஏனெனில் நேற்று, இன்று என தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. முதலில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 35 ரூபாய் விலை குறைந்து 13,685 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் 280 ரூபாய் விலை குறைந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,09,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை..!!

அக்டோபர் மாத தொடக்கத்தில் விலை குறைந்து வந்த தங்கம் கடந்த வாரத்தில் தொடர்ந்து விலை ஏற்றம் அடைந்தது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் கடைசி 3 வர்த்தக நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1760 ரூபாயும் 10 கிராமுக்கு 2200 ரூபாயும் விலை உயர்ந்தது. ஆனால் நல்வாய்ப்பாக இந்த வாரம் விலை குறைந்து வருகிறது. நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராமுகு 195 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1560 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,929 ரூபாய்க்கும் 10 கிராம் 1,49,290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,240 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 10 நாட்களாக விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் போக்கை பொறுத்து தான் தங்கம் விலை மாற்றமடையும். இன்று உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,194 டாலர்களாக உள்ளது, எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.49 லட்சமாக வர்த்தகமாகி வருகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Falls for Second Straight Day in Tamil Nadu: 22K Gold at Rs 13,685 per Gram, Savaran at Rs 1,09,480

தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை..!! / Gold prices in Tamil Nadu declined for the second consecutive day on Tuesday, offering relief to buyers planning jewellery purchases. The 22-carat ornamental gold rate fell by Rs 35 per gram to Rs 13,685, while one savaran (8 grams) dropped by Rs 280 to Rs 1,09,480 in Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli and other major cities.

Story first published: Tuesday, October 13, 2026, 10:38 [IST]

Other articles published on Oct 13, 2026

Read More

Previous Post

மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஞானசார தேரர் – வெளியாகிய தகவல்

Next Post

இந்தியா கூட்டணி பேரணி; ராகுல், பிரியங்கா, கார்கே, மம்தா பங்கேற்பு…

Next Post
இந்தியா கூட்டணி பேரணி; ராகுல், பிரியங்கா, கார்கே, மம்தா பங்கேற்பு…

இந்தியா கூட்டணி பேரணி; ராகுல், பிரியங்கா, கார்கே, மம்தா பங்கேற்பு…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin