• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாடு தழுவிய சுற்றிவளைப்பு: 327  தலைக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாடு தழுவிய சுற்றிவளைப்பு: 327  தலைக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
நாடு தழுவிய சுற்றிவளைப்பு: 327  தலைக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

இலங்கையில் 21 மாவட்டங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் SLS தரச்சான்றிதழ் அற்ற 327 தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போலி ஸ்டிக்கர் விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, கட்டாய SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட சுமார் 327  தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

21 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட 84 சுற்றிவளைப்புகளின் போதே இந்தத் தலைக்கவசங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SLS 517 தரநியமங்களுக்கு அமைவாக SLS சான்றிதழ் முத்திரை கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைப் பின்பற்றாது விற்பனை செய்யப்படும் பாதுகாப்பு தலைக்கவசங்களை இலக்குவைத்து கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது பல்வேறு வர்த்தக நாமங்களின் கீழ் விற்பனை செய்யப்பட்ட தலைக்கவசங்கள் கண்டறியப்பட்டதுடன், ஒரே மாதிரியான வர்த்தக நாமங்கள் பல மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அப்பால், குறித்த தரமற்ற பொருட்களை சந்தைக்கு விநியோகித்த இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களைக் கண்டறியும் நோக்கில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக கம்பஹா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் போலியான SLS ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிறுவர்களுக்கான தலைக்கவசங்கள் மற்றும் சிறிய அளவிலான தலைக்கவசங்கள் என்பனவும் SLS தரச்சான்றிதழ் இன்றியே சந்தைப்படுத்தப்பட்டு வந்துள்ளமை இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அல்லது ஏனைய வாகனப் பயணிகளுக்கான பாதுகாப்பு தலைக்கவசங்களாக அவை விற்கப்படும் பட்சத்தில், அவை SLS 517 தர விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு கடுமையான பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கொள்வனவு பற்றுச்சீட்டுகள் இன்றியும், உற்பத்தியாளர் அல்லது விநியோகஸ்தர் பற்றிய சரியான விபரங்கள் இன்றியும் தலைக்கவசங்கள் விற்கப்பட்ட பல சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 27 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 98 சோதனைகள் ஊடாக SLS தரச்சான்றிதழ் அற்ற 431 தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. 

அதற்கமைய, ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட இரு விசேட நடவடிக்கைகளின் மூலமாக இதுவரை 182 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 758 இற்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது வர்த்தக நிலையங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே குறிப்பதாகவும் அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.

SLS தரச்சான்றிதழ் அற்ற உந்துருளி தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல் மற்றும் இணையவழியில் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான விதிமீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடு தழுவிய திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்  தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும் போது, SLS தரச்சான்றிதழ் முத்திரையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், முறையான விற்பனைப் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன், முறையான சான்றிதழ் அற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படுவது அல்லது விற்பனை செய்யப்படுவது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருப்பின், 1977 என்ற நுகர்வோர் துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

Previous Post

ஒரே நொடி.. நேராக வந்து தாக்கிய ஏவுகணை.. கதறி ஓடிய பணிகள்.. திக்திக் சவுதி ஏர்போர்ட் தாக்குதல் | Riyadh Airport Attack: Houthi Strike Video Shows Passengers Fleeing, Flights Suspended

Next Post

ரியாத் விமான நிலையத்தில் ஹூதிகள் நடத்திய சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பதிக் ஏர் நிறுவனம் ஜெட்டாவுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது – Malaysiakini

Next Post

ரியாத் விமான நிலையத்தில் ஹூதிகள் நடத்திய சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பதிக் ஏர் நிறுவனம் ஜெட்டாவுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin